அட்லியை தொடர்ந்து.. மீண்டும்.. தமிழ் இயக்குனருடன் அடுத்த படத்தில் கைகோர்க்கும் ஷாருக்கான்..! – யாருன்னு பாருங்க..!

ஷாருக்கான் : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொடுத்துள்ளதாக தெரிகின்றது.

பொன்னியின் செல்வன் படத்தில் பிரமோஷனுக்காக கடந்த ஒரு மாத காலத்தில் மும்பையில் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்படி ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில்,கலந்து கொண்ட போது தான் மும்பையின் பிரபல நடிகரான ஷாருக்கானுடன் மீண்டும் இணைவீர்களா..? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் இருக்கிறது. அவருக்கு ஒகே என்றா அவருடன் நிச்சயம் பணியாற்றுவேன் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே மணிரத்தினம், ஷாருக்கான்  இணைந்து  தமிழில் உயிரே உயிரே படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் அப்போதே ஒரு பெரிய ஹிட்டை கொடுத்தது இளைஞர்கள் வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அந்த பாட்டு சத்தம் மட்டும் தான் அதிக அளவு கேட்டது என்று கூறுமளவுக்கு விஸ்வரூப வெற்றியைத் தந்தது.

தற்போது ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் துரிதமான முறையில் சென்று கொண்டு வருகிறது இதை அடுத்து தற்போது அவர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து இருக்கிறார்.

மிக விரைவில்  ஜவான் படம் வெளிவரக் கூடிய சூழ்நிலையில் இவர்களைப் பற்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் மணிரத்னம் மற்றும் ஷாருக் கான் தயாரிப்பில் விரைவில் ஒரு படம் அமையலாம் என்பது போன்ற எண்ணங்கள் பலரிடையே உள்ளது.

இந்நிலையில், ஷாருக்கான் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மணிரத்தினத்திற்கு கொடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே, தமிழ் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடித்து வரும் ஷாருக்கான். தன்னுடைய அடுத்த படத்தையும் தமிழ் இயக்குனருக்கு கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …