ரஜினி படத்தில் நாயகியாக ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார்.

அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை.
இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நாயகன் விஜய் சத்யா.

இந்த படத்தில் வரும் ஹீரோ, ரஜினியின் தீவிர ரசிகர் என்ற கேரக்டரில் வருவதால், படத்துக்கு ரஜினி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் ஏ. வெங்கடேஷ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

ரஜினியின் மருமகன் தனுஷ் உடன் நடித்து, தன் சினிமா பயணத்தை துவங்கிய ஷெரினுக்கு, தனுஷின் மாமனார் ரஜினியின் பெயர் கொண்ட இந்த படம், இன்னொரு ரவுண்டு வர உதவும், என்று சென்டிமென்ட் ஆக, நெட்டிசன்கள் பலரும், ஷெரினுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version