தென்றல் துளசி யார் தெரியுமா? – பலரும் அறிந்திடாத தகவல்..!

தென்றல் துளசி : பிரபல சீரியல் நடிகை ஸ்ருதிராஜுக்கு அறிமுகம் தேவையில்லை. சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு சீரியலில் பல வெற்றி சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ராஜ்.

கடந்த 1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் உருவாக அக்ரேஜன்ட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் எது என்று கேட்டால் இயக்கம் என்று கூறலாம்.

தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமான இவர் இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவருடைய நிஜ பெயரையே மறக்கடிக்கும் செய்யும் அளவுக்கு பிரபலமானது.

இந்த சீரியலுக்கு பிறகு இவரை பலரும் தென்றல் துளசி என்று அடையாளம் காண்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து திருமதி செல்வம் ஆபீஸ் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் கடந்த 2017-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியல் ஹீரோயினாக நடித்திருந்தார்.

குறிப்பாக நடிகர் விஜய் உடன் இவர் மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் விஜய் இவர் அண்ணா என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய்யும் இவரை வாமா தங்கச்சி என்றுதான் எங்கு பார்த்தாலும் அழைப்பாராம். ஒருமுறை நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு அவரே எதிர்பார்க்காத வண்ணம் அவருடைய வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்று கூறியிருக்கிறார்.

இதனால் மனம் நெகிழ்ந்து போன நடிகர் விஜய் எனக்கு தங்கை இல்லை என்ற ஒரு குறையை நீ தீர்த்து வச்சிட்டமா என்று உருக்கமாக கூறியிருக்கிறார். நானும் உங்களை என்னுடைய பிறந்த அண்ணனாக தான் நான் பார்க்கிறேன் என்று நடிகர் விஜய்க்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ராஜ்.

மேலும் பேட்டிகளில் பேசும்பொழுது நடிகர் விஜய் நான் என்னுடன் என்னுடன் பிறந்த அண்ணனாக தான் பார்க்கிறேன் என்று பலமுறை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக அலுவலக பக்கங்களில் ஆக்டிவான ஆசையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவது என ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக வைத்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை எடுத்து இருக்கிறது.

இப்படி சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் நடிகை ஸ்ருதிராஜுக்கும்… நடிகர் விஜய்க்கும் இப்படி ஒரு சொல்லப்படாத அண்ணன் தங்கை உறவு இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …