அந்த இடத்தில் மிதித்த பிரபல நடிகர்..! – நடிக்கவே முடியாது என மறுத்த சில்க் ஸ்மிதா..!

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் தங்களின் தனித்திறமைகளால் முன்னணியின் நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படியே வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக திரையுலகை கலக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ்.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி முதலிய மொழிகளில் கிட்டத்தட்ட 240 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.வில்லனாகவும் பின்பு ஹீரோவாகவும் நடித்த சத்யராஜ் வயதாகிய பின்பு குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக பெரிதும் பேசப்படும் பிரபலமாகவே உள்ளார். இவர் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய காலங்களில் குறிப்பாக 1980 களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள்.

இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களிலேயே அதிகம் நடித்தவர்.நடிகரும் இயக்குனருமான வினு சக்கரவர்த்தி தான் சில்க் ஸ்மிதாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர்.

சில்க் அறிமுகமான படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் சில்க் என்பது அதுவே பின்னாளில் அவரது அடையாளமாக மாறிவிட்டது.

சில்க் ஸ்மிதாவின் வசீகரமான தோற்றம் மற்றும் நடன அசைவுகளுக்காக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். அந்நாட்களின் இளைஞர்களின் கனவு கன்னி என்று சொன்னாலும் மிகையாகாது.

1980 களில் சில்க்ஸ்மிதா இல்லாத படங்களை இல்லை. குறைந்தது ஒரு பாடலிலாவது அவர் நடித்திருப்பார். அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் இல்லாத படங்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.17 வருடங்களில் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ராமநாராயணன் இயக்கிய சட்டத்தை திருத்துங்கள் என்னும் படத்தில் சத்யராஜுடன் ஒரு பாடலுக்கு சில்க் ஸ்மிதா நடனம் ஆடு இருப்பார், அப்பொழுது சத்யராஜ் சில்க்ஸ்மிதாவின் கால்களை மிதித்து விட்டாராம் அவரால் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் இனி இவருடன் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

பிறகு இயக்குனர் அவர்கள் சில்க் ஸ்மிதாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார். பின்பு சில நாட்களில் சத்யராஜ் மற்றும் சில்க் ஸ்மிதா இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்ததாக கூறியுள்ளார்.