“கோவில்” படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம், சிம்புவே… மிரண்டு போன சம்பவம்..!

இயக்குனர் மற்றும் நடிகரான டி ராஜேந்தர் அவர்களின் மகன் மற்றும் நடிகர் சிம்பு.இவர்  குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலைகள் அறிமுகமானார்.தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர்.

சிறுவயதிலேயே மிகச்சிறந்த நடன அசைவுகளை வெளிப்படுத்தி சிறந்த நடன அசைவுகளை கொண்ட குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். 2002ல் டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்பு பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக கோவில் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.கோவில் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார், திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்த இருந்தார்.

ராஜ்கிரன், நாசர், ரேகா, வடிவேலு, சார்லி போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் எந்தவிதமான பஞ்ச் டயலாக்கும் இன்று தனது எதார்த்த நடிப்பை பதிவு செய்திருப்பார் சிம்பு. திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு தாமதமாக வந்ததாகவும் இயக்குனர் ஹரி அவர்கள் இவரை நேரடியாக கண்டிக்காமல் தனது உதவி இயக்குனரை அழைத்து அவரை கடுமையாக திட்டியதாகவும், அதை பார்த்துக் கொண்டிருந்த சிம்பு தன்னை திட்டுவதற்கு பதிலாகத்தான் இவரை திட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அடுத்த நாள் முதல் தாமதமாக வருவதை தவிர்த்து சரியான நேரத்திற்குச் சென்று படத்தை முடித்துக் கொடுத்ததாக தகவல் வெளியாகியது.

ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சிறந்த வெற்றியை பெற்றது. பின்பு ஏனோ சில காரணங்களால் அவரது படங்கள் சரியாக ஓடவில்லை, அதைத்தொடர்ந்து சினிமாவிலும் அதிகமாக நடிக்கவில்லை.

இதனால் இவரது திரை வாழ்க்கை முடிந்து விட்டதாக தவறான செய்திகள் பரவியது.ஆனால் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் அவரது படங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளது.தற்போது மீண்டும் வெற்றிப் படிக்கட்டில் சிம்பு ஏறக்கடங்கியுள்ளதாக ஒரு அதிரசீகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …