லிட்டில் சூப்பர் ஸ்டார் பத்து தல படப்பிடிப்பு ஓவரானதால் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் சிம்பு…!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்த் க்கு பின் பெற்ற திறமையான நடிகர்களால் ஒருவர் நடிகர் சிம்பு. இடையில் இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சிற்சில மன சங்கடங்களால் இவர் திரை உலகில் இருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் இவரைப் பற்றிய வதந்திகளும் சர்ச்சைகளும் அதற்கு காரணமாகிவிட்டது.

 இதனை அடுத்து சிம்புவால் இனி நிச்சயமாக தமிழ் திரை உலகில் ஜொலிக்க முடியாது என்று நினைத்தவர்களின் மத்தியில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்து ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

 இந்தப் படத்திற்காக இவர் உடல் எடையை முழுவதும் குறைத்து பக்காவாக களம் கண்டு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார். இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் இவர் பத்து தல என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் அருணாச்சலம், கலையரசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

அந்த வகையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் எந்த படமானது கன்னட படத்தில் வெளியான மப்டி திரைப்படத்தின் ரீமேக் தான். இந்த படத்தின் ஷூட்டிங் ஆனது கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடந்தது.

 இதனை அடுத்து தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் கடந்த இரண்டு  வாரங்களாக நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங் ஆனது நேற்றுடன் நிறைவு பெற்று உள்ளதால் சிம்பு மற்றும் படக்குழுவினர் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிகழ்வானது தற்போது புகைப்படங்களாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …