முன்னணி நடிகருடன் சேர்ந்து நடனமாட அனுமதிக்காத நடன இயக்குனர்..! பலரும் அறியாத சிம்ரன் காதல் கதை..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வந்தவர் நடிகை சிம்ரன். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முடி சூடா ராணியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சிம்ரனின் இடத்தை நிரப்ப யாரும் வரவில்லை.

நடிகை திரிஷா இவருடைய இடத்தை நிரப்பினார் என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போதும் நடிகை சிம்ரன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சிம்ரன்.

அனைத்து நடிகர்களுடன் நடித்தாகிவிட்டது. ஆனால் ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்கவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்து கொண்டார். இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சிம்ரனை சுற்றி பல்வேறு காதல் சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக நடிகர் நடன இயக்குனர் பிரபு தேவாவின் தம்பி ராஜூ சுந்தரத்துடன் இவர் காதலில் இருந்தார் என்ற தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு காதல் கிசுகிசு என்று கூறலாம்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ராஜசுந்தரத்துடன் காதலில் இருந்த நடிகை சிம்ரன் ஒரு கட்டத்தில் சில சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்து விட்டார் என்று கூறப்பட்டது.

ராஜூ சுந்தரம் சிம்ரன் காதலில் இருக்கும் பொழுது பல திரைப்படங்களில் நடிகை சிம்ரனுக்கு நடன பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணு படபோகுதய்யா என்ற திரைப்படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக நடிகர் சிம்ரன் நடித்திருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடிகை சிம்ரனும் விஜயகாந்த்ம் நடனமாடுவது போன்ற ஒரு சூழ்நிலையில் நடிகர் விஜயகாந்தை ஒருபுறமும் நடிகை சிம்ரனை வேறொரு இடத்திலும் வைத்து நடனத்தை இயக்கியிருக்கிறார் ராஜசுந்தரம்.

இதனால் கடுப்பான நடிகர் விஜயகாந்த் என்ன செய்கிறீர்கள். இது ரசிகர்களுக்கு பிடிக்காது என ராஜசுந்தரத்துடன் பேசி இருக்கிறார். அதன் பிறகு படக்குழுவினரின் சமராசத்துடன் நடிகை சிம்ரன் விஜயகாந்த் ஜோடியாக நடனமாடுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன என்பதுதான் பலரும் அறியாத தகவல்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சிம்ரன் குறித்து அவருடைய காதல் பக்கங்களை புரட்டி வரும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version