கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். மௌன வலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு தடம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த இரண்டாவது திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், முதல் திரைப்படம் இதுவரை வெளிவரவே இல்லை. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும் விதமாக இருந்தது. இதனை தொடர்ந்து தீர்ப்புகள் விற்கப்படலாம் அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த படங்களில் எல்லாமே துணை கதாபாத்திரங்களிலும் கதைக்க வலு சேர்க்கக்கூடிய கதாபாத்திரங்களுமாகவே இருந்தன. ஆனால் முழு நேர முழுமையான ஹீரோயினாக இவர் எந்த படத்திலும் நடித்ததில்லை.
அந்த வகையில், பற்ற வைத்த நெருப்பு ஒன்று என்ற திரைப்படத்தில் முழுநேர ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார். இதில் புதுமுக ஹீரோ தினேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.
இவர்களுக்கு சைபர் கிரைம் திருட்டு மற்றும் நெட்வொர்க் டெலிவரி மூலம் நடக்கும் சமூக விரோதர செயல்களை தற்கால சமூக பிரச்சினைகளை பேசும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்தர் இந்த படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தன்னுடைய இணைய பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள செல்ல புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்த விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் எனவும் பேச்சுகள் நிலவுகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.