நத்தை கிரேவி

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நத்தை கிரேவி ரெம்ப பேமஸ்.

சத்துக்கள்

உடலுக்கு தேவையான இரும்பு சத்து, புரதச்சத்து, ஒமேகா – 3, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள்

தேவையான பொருட்கள்

நத்தை – அரை கிலோ

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 1

ப.மிளகாய் – 3

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு,

தேங்காய் விழுது – கால் கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம்.  வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். 

பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும். நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.

கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version