“உங்களுக்கு இன்னும் வயசே ஆகல..” – செதுக்கி வச்ச சிலை.. – ரசிகர்களை புலம்ப வைத்த புன்னகையசி சினேகா..!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக தன்னுடைய அழகான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா. அந்த வகையில் தற்பொழுது சுடிதார் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளியான மலையாள திரை படத்தில் ஹீரோயினாக வெற்றி கொடுத்த இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. கடந்த 2012ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. அவ்வப்போது தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகை சினேகா தற்போது சுடிதார் சகிதமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், வரலட்சுமி நோன்பு கொண்டாடிய இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னுடைய தோழிகள் மற்றும் சகோதரிகளுடன் வரலட்சுமி நோன்பை சிறப்பாக கொண்டாடி இருந்தார் நடிகை சினேகா.

தனுஷின் பட்டாஸ் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குணச்சித்திர வேடங்களில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது சினிமாவில் நடிகையாக பயணிக்க விரும்புகிறேன்.

ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இப்போது இல்லை எனவே குணச்சித்திர வேடங்களிலும் என்னை பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றார். மேலும் சின்னத்திரைகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார் நடிகை சினேகாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னும் வயசு ஆகல என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …