Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

என்ன விலை அழகே..? காதலர் தினம் நாயகி சோனாலி பிந்த்ரே இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

நடிகை சோனாலி பிந்த்ரே(Actrees Sonali Bendre)  சிறந்த நடிகையாக, சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். மாடல் துறையில் இருந்தவர்.

காதலர் தினம் படத்தில், குணால் இவரை பார்த்து பாடும் என்ன விலை அழகே, சொன்ன விலைக்கு வாங்க வருவேன், விலை உயிர் என்றாலும் தருவேன், இந்த அழகை கண்டு வியந்து போகிறேன், சொல்ல மொழியின்றி மூர்ச்சை ஆகிறேன் என பாடி இருப்பார்.

அந்த பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், அந்த பாடல் காட்சியில் சோனாலி செம அழகில், ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இவரை பாலிவுட் நாயகி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி படங்களில் நடித்திருந்தாலும், இந்தியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நடிகை சோனாலி பிந்த்ரே
Actrees Sonali Bendre

சோனாலி பிந்த்ரவுக்கு இப்போது, 48 வயது ஆகிறது. ஆனால், பார்வைக்கு இன்னும் இளமையான நாயகியாகவே தோற்றமளிக்கிறார். இவரது சொந்த ஊர் மும்பை, மகாராஷ்டிரா தான். சோனாலிக்கு, கடந்த 2002ம் ஆண்டில், திருமணமானது.

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் கோல்டி பெல் என்பவரை கணவராக ஏற்றுக்கெொண்டார்.

இவர்களுக்கு 2005ம் ஆண்டில், ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சோனாலி ரன்வீர் என பெயரிடப்பட்டது.
கடந்த 1995ம் ஆண்டில், சோனாலிக்கு பிலிம்பேர், லக்ஸ் புதுமுக விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாலி பிந்த்ரே
Actrees Sonali Bendre

சோனாலி பிந்த்ரே, தனது இளமை காலத்தில் பெங்களூரு, மும்பை பள்ளிகளில் படித்தவர். படிப்பை முடித்த பின் மாடலிங் துறையில் அழகியாக வலம் வந்தார்.

கடந்த 1994ம் ஆண்டில் ‘ஆக்’ என்ற படத்தில், நடிகர் கோவிந்தாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து பாய், முராரி, சர்பரோஷ், ஜம்ஹம், டூப்ளிகேட், தேரா மேரா சாத் ரஹே, அனாஹட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதில் சில படங்களும் மெகா ஹிட் படங்களாக அமைந்தன.

இவர் அமீர்கான், ஷாருக்கான், சைப்கான், சல்மான் கான் என நான்கு முன்னணி கான் நடிகர்களுடனும்தான் நடித்தவர். மேலும், பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களான அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, அஜய்தேவ்கன், சஞசய் தத், அனில்கபூர் போன்றவர்களுடனும் சோனாலி பிந்த்ரே நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாலி பிந்த்ரே
Actrees Sonali Bendre

சோனாலி பிந்த்ரோ மிகச்சிறந்த டான்ஸர் என்று பாராட்டுகளை பெற்றவர். பல படங்களில், இதை வெளிப்படுத்தி, ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றவர்.

குறிப்பாக கத்தார், சபூட், பம்பாய், லஜ்ஜா மற்றும் மேஜர் சாப் போன்ற படங்களில் இவரது நடனம், அபாரமாக இருந்ததாக, ரசிகர்கள் இன்றும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆப் கி சோனியா என்ற அரங்க நாடகத்தில் நடித்தவர் என்ற பெருமை சோனாலிக்கு உண்டு.. கியா மஸ்தி கியா தூம் என்ற டிவி நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சோனி டிவியில் ஐடாலின் நடுவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாலி பிந்த்ரே
Actrees Sonali Bendre

லக்ஸ் புதுமுக நடிகை பிலிமபேர் விருது, அனில் கபூர் ஐஸ்வர்யா ராய் நடித்த ஹமாரே தில் ஆப்கே பாஸ் ஹே படத்தில் சிறந்த நடிப்புக்கான, சிறந்த துணை நடிகை விருது பெற்றார். நட்சத்திர திரை விருது, சிறந்த நடிகைக்கான இந்த விருது மராத்தி படமான அனாஹட், இவருக்கு பெற்றுத் தந்தது.

தமிழில், நடிகர் குணால் உடன் சோனாலி நடித்த படம் காதலர் தினம். தமிழ் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. தொடர்ந்து, கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில், இவர் நடித்தார். இந்த படம், பெரிய அளவில் பேசப்படவில்லை.

நடிகை சோனாலி பிந்த்ரே
Actrees Sonali Bendre

கடந்த 2018ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே பின், அந்த நோயை எதிர்கொண்டு வென்று, பூரண குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும், இவர் பழைய அழகோடுதான் வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில், சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகி வருகின்றன.

இப்போதும் ரசிகர்கள் என்ன விலை அழகே, என்றுதான் இந்த புகைப்படங்களை பார்த்தவுடன், பாடுகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version