அப்பாவுடன் போட்டோ ஷூட் – அமர்க்களப்படுத்திய செளந்தர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரும் அவ்வப்போது, ரஜினிகாந்த் வெளியூர்களுக்குச் செல்லும் போது உடன் செல்வது வழக்கம். அதுபோல் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், ரஜினிகாந்த் வெளியூர் பயணம் செய்தால், கண்டிப்பாக உடன் செல்வார். தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘பிஸி’யாக இருப்பதால், சமீபத்தில் மும்பை சென்ற தனது அப்பா ரஜினியுடன், செளந்தர்யா சென்றிருக்கிறார்.

மும்பையில் நடந்த நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, அங்கு நடந்த போட்டோ ஷூட்டில், ரஜினிகாந்த் ஸ்டைலாக நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற டீ சர்ட்டில் ஸ்மார்ட் லுக்கில், அந்த புகைப்படங்களில் அசத்தலாக தெரிகிறார் ரஜினிகாந்த்.

‘வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டுப் போகல’ என, படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன் சொன்ன டயலாக்கை நிஜமாக்கி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் இந்த புகைப்படங்கள்.

போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட தனது அப்பாவின் ஸ்டைலான போஸ்களில் உள்ள புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மகள் செளந்தர்யா,
அதில் அவரும் சில புகைப்படங்களில், ரஜினியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘72 வயதாகியும், நம்ம தலைவர் இப்பவும் அதே யூத் தான், தலைவா, எப்பவுமே நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்,’ என, கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது, நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்து ஞானவேல்ராஜா இயக்கத்தில், தனது 170 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version