80,000 ஆண்டுகளுக்கு பின் “வால் விண்மீன்”.. சாய போகும் பெரிய தலை.. பறிபோகும் ஆட்சி.. நேற்று சோழன்.. நாளை இவரா..?.

அறிவியலில் ஆயிரம் அதிசயங்கள் இந்த உலகம் ஆரம்பித்த காலம் முதல் நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வால் விண்மீன் ஒன்று ஏற்படப் போவதாகவும் அது 80000 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்வதாகவும் இதனால் ஏற்படப் போகின்ற நிலைமை என்ன என்பது பற்றி சில திடுக்கிடும் ரகசியங்கள் வெளி வந்துள்ளது.

பொதுவாகவே வால் நட்சத்திரம் தோன்றுகிறது என்றால் அது அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டதற்கான அதிகாரப்பூர்வம் அல்லாத விஷயங்கள் நிறைய உள்ளது.

மேலும் இந்த வால் நட்சத்திரமானது இன்று முதல் வெறும் கண்களால் பார்க்க கூடிய அளவு தெரியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த வால் நட்சத்திரம் தோன்றுவதால் ஆட்சிக்கும் அழிவிக்கும் ஆரம்பம் என்று வான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

எனவே இது குறித்து வான சாஸ்திர நிபுணர்களிடம் பேசியபோது சொல்லப்பட்ட விஷயங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரத்தால் அரச குடும்பத்திற்கு ஆபத்து என்று சொல்லப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதனை கமலஹாசன் தன்னுடைய குரலில் பதிவு செய்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள். விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் பனி துகள்கள் ஒருங்கிணைவதால் உருவாகும் இந்த வால் நட்சத்திரம் நம் சூரிய குடும்பத்தையும் பால்வழி மண்டலத்தையும் சுற்றி வரும்.

இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியை நெருங்கும் போது பூமியில் தென்படும் மேலும் இதனால் ஆபத்துகளும் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறியுள்ளது. இந்நிலையில் சீன விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 80,000 ஆண்டுகளுக்குப் பின்பு உலகை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் வருகிறது.

இந்த வால் நட்சத்திரத்தை தற்போது நாசா விஞ்ஞானிகள் படம் பிடித்து இருக்கிறார்கள். சுமார் 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வால் நட்சத்திரமானது பூமியை சுமார் 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.

இந்த வால் நட்சத்திரம் இன்று முதல் கிழக்கு வானில் அதிகாலை நேரத்தில் வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வகையில் இருக்கும். இதனை அடுத்து பூமியின் தென்பகுதியில் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜெய்ஸ்ரீ சாரநாதன் கூறிய தகவலின் அடிப்படையில் ஆதிகாலத்தில் மகாபாரதத்தில் பூச நட்சத்திரத்தில் இந்த மாதிரி தூமகேது என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் தோன்றியது. அதுவே ராமாயண காலத்தில் மூல நட்சத்திரத்தில் தோன்றியது.

தற்போது ஹஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் தோன்றுகிறது. இது வெங்கடாசலபதியின் நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. இதில் சித்திரை நட்சத்திரம் அரசர்களுக்கு உரியது என்பதால் அரசர்களுக்கு ஆபத்து ஏற்படும். அதாவது ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆபத்து.

பூமியின் மீது இந்த வால் நட்சத்திரம் மோதவில்லை என்றாலும் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய எந்த நட்சத்திரத்தால் மவுண்ட் தோபா எரிமலை வெடித்தது.

தென் பகுதியில் இருப்பதால் தென்பகுதியைச் சார்ந்தவர்களுக்கு கண்டிப்பாக ஆபத்து உள்ளது. நாம் வடபகுதியில் இருப்பதால் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் கஷ்டங்களும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஆந்திரா கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களுக்கு கெடுதல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உலக அளவில் பூமியின் தெற்கு பகுதியில் இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam