வணங்கும் முறை: நம்மை படைத்து இந்த உலகத்தில் நம்மை வாழ்வாங்கு வாழ நமக்குத் தேவையான அனைத்தையும் அள்ளித் தந்திருக்கும் கடவுளை நீங்கள் தினமும் கோவிலுக்கு சென்று வழிபடுகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் விலகி உங்கள் வாழ்க்கை வளமாகும்.
அப்படி கடவுளைக் கோயிலுக்கு சென்று வழிபடுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் இல்லங்களிலும் வழிபட என்று சில வழிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த முறைகளை தான் கடவுளை வணங்கும் முறைகள் என்று சொல்லலாம். அந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் கடவுளை வணங்கும்போது எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
How to Pray God
அந்த வகையில் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடும்போது நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக எங்கள் கட்டுரையில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யும்போது முதலில் இறைவனை தரிசித்து விட்ட பிறகுதான் பிரகாதத்தை வலம் வர வேண்டும்.மேலும் வெளிப்பிரகாரத்தை ஆலயத்தோடு வலம் வந்து வழிபட்டு விட்டு பிறகு கொடி மரத்தின் கீழ் விழுந்து நீங்கள் வணங்கலாம்.
How to Pray God
அவ்வாறு கொடி மரத்தில் நீங்கள் விழுந்து வணங்கும் போது ஆண்கள் மற்றும் பெண்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முறைப்படி அவர்கள் வணங்குவது சிறப்பாக இருக்கும்.
பெண்கள் கீழே விழுந்து வணங்கும் போது அவர்களுடைய பஞ்ச அங்கங்கள் தரையில் விழும்படி விழுந்து வழிபாடு செய்வது உகந்தது. அதில் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு பாத நுனிகள் பூமியில் படும்படி வணங்குவது சிறப்பானதாகும். இதன் மூலம் இறைவனின் ஆசி கிடைக்கும். இதைத்தான் பஞ்சாங்க நமஸ்காரம் என்று கூறுகிறார்கள்.
அந்த வகையில் ஆண்கள் அஷ்டம் அதாவது 8 அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதற்காக அவர்களது தலை ,முகம் இரண்டு தோள்பட்டைகள், உடல் ,இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி என எட்டு பகுதிகளிலும் தரையில் பட்டு வணங்குவதின் மூலம் இறையருள் நிச்சயமாக அவர்களுக்கு கிட்டும் இதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்று கூறுகிறோம்.
How to Pray God
இதனைத் தவிர்த்து நாம் கரங்கள் இரண்டும் ஒட்டுமாறு நமஸ்காரம் செய்வதை உத்தம நமஸ்காரம் என்கிறோம். இதில் நமது வேத ரேகைகள் உள்ளது என்று கூறுவார்கள்.மேலும் இரண்டு கரங்களையும் இணைத்து இதயத்திற்கு அருகே மார்பின் மையத்தில் வைத்து வழிபடும்போது லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
தலைக்கு மேல் இரண்டு கரங்களைக் கூப்பி கடவுளை வழிபடுவது த்ரியங்க நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஏகாங்க நமஸ்காரம் என்பது தலையை குனிந்து வணங்குவது ஆகும்.
How to Pray God
மேலும் நீங்கள் கோயிலுக்குள் வரும் வலம் வரும்போது ஒவ்வொரு சன்னதியிலும் கைகூப்பி வணங்குவது சிறப்பு.அங்கு கீழே விழுந்து வணங்கக்கூடாது. கொடி மரத்தை தாண்டி மூலவருக்கு மட்டுமே நீங்கள் கீழே விழுந்து வணங்க வேண்டும். கோயிலுக்குள் சொல்லும் போது தெய்வத்தின் திருநாமத்தை உச்சரிப்பதும் மந்திரங்களை சொல்வதும் சிறப்பாக இருக்கும்.