“ஆச்சரியம் தரும் பல்லி வழிபாடு..!” – என்ன தெரிந்து கொள்ளலாமா?

பல்லி வழிபாடு:காலம் காலமாக பல்லியை வழிபடக்கூடிய வழக்கம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அரங்கநாத சுவாமிகள் வழிபட்ட பிறகு நீங்கள் இந்த பல்லியை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் என்பது இன்றுவரை இருக்கும் நம்பிக்கை.

இதுபோலவே காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி திருக்கோயிலின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லியின் உருவங்கள் இடம்பெற்றுள்ளது .இதைத் தொட்டு வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்தப் பல்லிகளை கந்தர்வர்கள் என்று கூறுகிறார்கள்.

lizards

இதுபோலவே ஈரோட்டில் இருக்கக்கூடிய ஒரு திருக்கோயிலில் பல்லி வழிபாடு நடந்து வருவது எத்துணை பேருக்கு தெரியும். இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கல திருத்தலத்தில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமிகளின் ஆலயத்தில் தான் இந்த பல்லியை வணங்கும் முறை இன்னும் உள்ளது.

மேலும் இந்தக் கோயிலில் மேற்குப்புறம் நோக்கி சுவரில் மூன்றடி நீளமுள்ள பல்லியின் சிற்பம் ஒன்று உள்ளது. இந்தப் பல்லியை மோட்ச பல்லி என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

lizards

இந்தப் பல்லிக்கு தீபங்கள் ஏற்றியும், தாங்கள் நினைத்ததில் நடக்க வேண்டும் என்று மனதார நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும் இங்கு நடக்கும் பல்லி வழிபாட்டை போல வேறு எந்த கோயில்களிலும் பல்லிகளுக்கு வழிபாடு நடப்பதில்லை.

மனிதர்களோடு கடவுள் உரையாட பல்லியை பயன்படுத்துவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நமது வீட்டிற்குள் பல்லி ரூபத்தில் முன்னோர்களும், கடவுளும் வருவதாக கூறி இருக்கிறார்கள்.

lizards

இதனை வைத்து தான் நமது சாஸ்திரங்களில் ஒன்றாக பல்லி அல்லது கௌரி சாஸ்திரம் உள்ளது. இதன் மூலம் பல்லி நமது உடலில் விழும் இடத்தைப் பொறுத்து நமக்கு ஏற்படும் நன்மை, தீமை பற்றி நம்மால் கணித்து கூற முடியும்.

மேலும் பல்லி சத்லமிடும் திசையை வைத்து நன்மை நடக்குமா? தீமை நடக்குமா? என்பதையும் கணித்துக் கூறிவிடுவார்கள். ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளதே என்பது தெரியவில்லை. எனினும் முன்னோர்கள் வகுத்த எல்லாவற்றிலுமே சில ரகசியங்கள் புதைந்துள்ளதால் இந்த விஷயமும் அப்படியே இருக்கும் என்று நம்பலாம்.