எலி வங்கு என்றாலும் தனி வங்கு இருக்க வேண்டும் என்ற பழமொழி உள்ளது. எலிக்கே இப்படி என்றால் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தனியாக ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதை ஒரு கனவாகவும் லட்சியமாகவும் கொண்டிருப்பார்கள். சிலருக்கு இந்த வீடு யோகம் இருக்கும் சில பேருக்கு வீடு கட்டக்கூடிய யோகமோ வாங்கக்கூடிய யோகமும் இருக்காது.
new house
எனினும் அந்த யோகம் இல்லாதவர்கள் கூட சொந்தமாக வீடு கட்டக்கூடிய யோகத்தை உண்டு பண்ண ஒரு அற்புதமான பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கிரக தோஷம் நீங்கி அவர்களுக்கு சீக்கிரமே புதிய வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சொந்த வீடு கட்ட எளிமையான பரிகாரம்
சொந்த வீடு கட்டவும், சொந்த வீடு வாங்கவும் உங்களுக்கு யோகம் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் தாய் தகப்பனுக்கு பாத பூஜை செய்தாலே போதும். அதுவும் தாய் பிறந்த நாள் நட்சத்திரத்தை பார்த்து அவர்களுக்கு பாத பூஜை இணைந்து செய்வதின் மூலம் உங்களுக்கு கண்டிப்பாக அந்த யோகம் உண்டாகும்.
new house
உங்கள் தாய் தந்தையரின் பாதம் இரண்டையும் ஒரு தாம்பாளத்தில் வைக்க சொல்லி கொடுத்து அவர்களின் காலை சுத்தமாக நீதான் கழுவி பிறகு மஞ்சள், சந்தனம் பொட்டு வைத்து பூக்கள் போட்டு மனம் குளிர இதை செய்து பாருங்கள்.
அதனை அடுத்து அந்த தீர்த்த்தை உங்கள் தலையில் தெளித்துக் கொண்டால் பாத பூஜை நிறைவடைந்து விடும். இதனை நீங்கள் செய்து பார்ப்பதன் மூலம் கட்டாயம் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் இதை செய்யலாம்.
new house
அப்பா மட்டும்தான் இருக்கிறார்கள் அம்மா இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே இந்த பாத பூஜையை செய்தால் போதும். மேலும் நீங்களும் எந்த எளிய பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.