Connect with us

ஆன்மிகம்

«வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்..!» – வாஸ்துபடி எது என்று தெரிந்து கொள்ளலாமா?

By TamizhakamApril 21, 2023 9:11 PM IST

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்:வாஸ்துபடி வீட்டில் சில மரங்களை வளர்ப்பதால் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டில் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

vasthu tree

உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்க வேண்டிய மரங்கள் என்னவென்றால் வேப்பமரம், தென்னை மரம், பாக்கு மரம் போன்ற மரங்களை வைத்து வளர்ப்பது சிறப்பாக இருக்கும்.

பழ மரங்களைப் பொறுத்தவரை மாதுளை, மாமரம், பலாமரம், கொய்யா போன்ற மரங்களை வளர்த்து பயன்படலாம்.

மேலும் இந்த மரங்களை நீங்கள் வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விதைக்கலாம். ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான மரங்களை வைத்து வளர்ப்பது குடும்பத்திற்குள் நல்ல சுபிட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

vasthu tree

நீங்கள் உங்கள் தோட்டத்தில் அதிக அளவு மரங்களை நடும்போது உங்களுக்கு தேவையான சுத்தமான காற்று கிடைக்கும். மேலும் காற்றோட்டமாக இருப்பதின் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மரங்களை அதிகளவு வளர்க்கும் போது குளிர்ச்சியான காற்று நம் வீட்டை சுற்றி வீசும். இதன் மூலம் கோடையில் ஏற்படும் வெப்பத்திலிருந்து உங்களை நீங்கள் எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.

vasthu tree

மேலும் சில மரங்களை வாஸ்துபடி வீட்டில் வளர்க்கக் கூடாது என்று கூறி இருக்கிறார்கள். அந்த மரங்களை நீங்கள் வீட்டில் வைப்பது மூலம் உங்களுக்கு வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக அகத்தி மரம் , முருங்கை மரம் போன்றவற்றை வீட்டில் வைக்க ஆகாது.

பூப்பூக்கும் செடிகளான பாரிஜாதம், முல்லை, மல்லி, செண்பகம், நித்யமல்லி மற்றும் வாசனை உள்ள பூச்செடிகளை உங்கள் வீட்டுக்கு முன் வைப்பதின் மூலம் லட்சுமி கடாட்சம் ஏற்படும். எனவே மேற்கூறிய செடிகளையும் மரங்களையும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பு நல்ல பலனை பெறுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top