ஸ்ரீபகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பாரதத்தின் தென் அந்தத்தில் அமைந்துள்ள மிகப்புகழ் வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் ஜெபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார். 

மூலவர் : பகவதி அம்மன்.

தீர்த்தம் : பாபநாச தீர்த்தம்.

புராண பெயர் : மந்தைகாடு.

ஊர் : மண்டைகாடு.

மாவட்டம் : கன்னியாகுமரி.

தலவரலாறு

 முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்கள் நிலை குறித்து வருந்தி நின்றனர். சிவபெருமான் தமது அருளாற்றலைக் கன்னி பகவதியாக உருவப்பெறச் செய்தார். பாணாசுரன், அழகின் உருவான தேவியைக் கண்ணுற்று அவள் மேல் மையல் கொண்டு தனது வலிமையால் தேவியைக் கவர்ந்து செல்ல முடிவு செய்து, தனது வாளை உருவி பயமுறுத்தினான். பாணாசுரன் அந்த தருணத்தில் தனது முடிவானது ஒரு கன்னிப் பெண் ஒருத்தியாலேயே நிகழும் என்ற உண்மையை அவன் மறந்துவிட்டான். பராசக்தியான தேவி தன் வாளுடன் அரக்கனை எதிர்த்தாள், முடிவில் அரக்கனின் தலை துண்டிக்கப்பட்டது.

 தன் குறிக்கோள் நிறைவேறியதும் கன்னி பகவதியார் சுசீந்திரத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கணவனாக அடைய ஒற்றைக்காலில் தவமிருந்தாள். இறைவனும் அவள் வேண்டுகோளை ஏற்று கொண்ட பிறகு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தன. திருமணத்திற்கு மணமகன் குறிப்பிட்ட நேரத்தில் வராத காரணத்தால் கோபங்கொண்ட தேவியார் தனது ஏமாற்றத்தின் வேகத்தால் அங்கு இருந்த எல்லா பொருட்களையும் அழித்து கற்சிலையாகி நின்றுவிட்டாள். இவ்வாறு தேவியின் சாபத்தால் மாறிய பொருட்கள் தாம் இன்று கடலோரத்தில் பல நிறங்களில் காணப்படும் மணல்களாகும் என்று கூறுகிறது தலப்புராணம்.

தலச்சிறப்பு

 காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பது இந்துக்களின் சிறந்த விதியாகும். அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல் தனிப்பெரும் சிறப்பு. முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை. மிகச்சிறந்த சுற்றுலா மையம் ஆகும்.

பிரார்த்தனை :

 கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். 

 அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்கின்றனர். 

 இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும், தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version