அழகு தேவதை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. – இளசுகளை பாடாய் படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தனுஷ்..!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஜிதா தனுஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிறந்த சில மாதத்திலேயே சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா தனுஷ். என்னங்க சொல்றிங்க..? பிறந்த சில மாதத்திலேயே சினிமாவில் அறிமுகமானாரா…? என்று கேட்கிறீர்களா.

நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவருடைய குழந்தையாக நடித்தது வேறுயாருமல்ல சுஜிதா-வே தான். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக வாலி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தாலும் கூட இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்னவோ பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.

மட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் அறியப்படுகிறார்.

விளம்பரப் படங்களை இயக்கி வருகிறார். இதுதொடர்பான வீடியோவையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் கதை கேளு, கதை கேளு என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு கதை சொல்லும் சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவுசெய்வது வழக்கம்.

சமீபத்தில் தெலுங்கானா ஆளுநரும் பிரபல அரசியல்வாதியுமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடமிருந்து விருது வாங்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார் நடிகை சுஜிதா.

இந்நிலையில் புடவை சகிதமாக பார்ப்பதற்கு கோயில் சிலை போல இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அழகுதேவதை.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே… என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …