“உங்க வீட்டுல செல்ல நாய் இருக்கா..!” – அப்ப நோய் அறிகுறிகள இப்படி கண்டுபிடிங்க..!

இன்று அனைவரது வீட்டிலுமே செல்லப்பிராணிகள் உள்ளது. குறிப்பாக நாய், பூனை, லவ் பேர்ட்ஸ்,கோழி என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் மனிதருக்கு உற்ற தோழனாக இருக்கக்கூடிய நாய்க்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி எந்த பதிவில் பார்க்கலாம்.

pet dog

தற்போது அதிகரித்து இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு திடீரென்று நோய்கள் ஏற்படலாம். அப்படி நோய்கள் ஏற்படுவதை நீங்கள் முன்கூட்டியே அவற்றின் தோற்றத்தை வைத்து கணித்து விடலாம்.

செல்லப்பிராணிக்கு ஏற்படும் நோய்க்கான  அறிகுறிகள்

உங்கள் செல்ல நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதன் கண்கள் வீங்கி சிவப்பாகவும், மூக்கானது வறட்சி அடைந்தும் இருக்கும்.

மேலும் நீங்கள் அதன் அருகில் செல்லும்போது ஒரு துர் வாடை ஏற்படும். இது நாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோயின் முதல் அறிகுறி என்று கூறலாம்.

pet dog

தினமும் சூப்பராக விளையாடும் உங்கள் செல்ல நாய் சோர்வாகவும், சாப்பிடாமலும் சில நேரங்கள் படுத்தவாரே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது தும்மவோ ,இருமவோ செய்தால் உடனடியாக நீங்கள் கால்நடை மருத்துவரிடம் உங்கள் செல்லக் குட்டியை அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் செல்ல நாய்களின் பற்களின் நிறத்தை வைத்தோ, அல்லது ஈறின் நிறத்தை வைத்தோ அது ஆரோக்கியமாக உள்ளதா, இல்லையா என்பதை  கண்டுபிடித்து விடலாம். பொதுவாக அதன் ஈறு பிங்க் நிறத்தில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே மஞ்சளாகவோ, நீலமாகவோ, வெள்ளை நிறத்தில் இருந்தால் நோய்வாய்ப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

pet dog

உங்கள் செல்ல நாய் தூங்கும் போது அமைதியாக தூங்காமல் உடலானது நடுக்கத்தோடு இருந்தால் அதற்கு ஏதாவது ஒரு வலி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நாய் அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் இருந்தால் நாய்க்கு சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு நீங்கள் கால்நடை மருத்துவரிடம் அதற்குரிய மருந்தினை வாங்கி கொடுக்க வேண்டும்.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை மனதில் கொண்டு உங்கள் வீட்டு நாயினை நீங்கள் மிகச் சிறப்பான முறையில் இந்தக் கோடையில் நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு அவற்றை பராமரிக்க முடியும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version