ப்பா… 51 வயசுலயும் இப்படியா..? – இணையத்தை தெறிக்க விடும் நடிகை தபூ..! – உருகும் ரசிகர்கள்..!

48 வயதானவர் இவர் காதல் தேசம் படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை தபூ. நல்ல உயரம், அளவான உடல்வாக்கு, கூர்மையான மூக்கு இவற்றால் ரசிகர்களில் கனவு நாயகியாக வெளிவந்த இவர் பாலிவுட்டிலும் ஜொலித்தவர்.

பாலிவுட் நடிகைகளின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட தபு 90களில் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வந்தார். இவர் இரண்டு முறை தேசிய விருதும் பலமுறை ஃபிலிம் பெற்றவர் தன் நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர்.

ஹிந்தியில் முன்னணி நடிகர்களாக திகழக்கூடிய அமிதாப்பச்சன், சல்மான்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களோடு இணைந்து வெற்றி படங்களை தந்தவர்.

சினிமா குடும்பத்தில் பிறந்த இவரின் தங்கையும் ஒரு நடிகையாக தான் திகழ்ந்தார் .அதுமட்டுமல்லாமல் பிரபல ஹிந்தி குணச்சித்திர நடிகையான ஷபானா ஆஸ்மி தபுவின் சொந்த அத்தை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சைவம் மட்டுமே சாப்பிடக்கூடிய இவரின் உடல்வாகை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் இவர் தமிழில் இருவர் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்பட சூட்டில் சிவப்பு நிற உடை அணிந்து அழகான தேவதையை போல் காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த வயதிலும் இப்படியா… என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

சில ரசிகர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உள்ளது. இவரது கவர்ச்சிக்கு என்றுமே எல்லை இல்லை என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்கள்.

இதை எடுத்து சில ரசிகர்கள் இவருக்கு சிவப்பு நிறம் தான் பிடிக்குமோ? சிவந்த மேனிக்கு சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருப்பது பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருப்பதோடு ரெட் அண்ட் ரெட் ரெடி டு ஃபைட் என்ற வசனங்களை பேசி கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.