ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?
வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா.
அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின.
தமிழில் எண்ட்ரி:
2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் குழந்தை கதாபாத்திரமாக ஆறுமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.
தொடர்ந்து இரு திரைப்படங்களி...