கணவர் மரணித்து பல ஆண்டுகள் கழித்து கர்ப்பமான கண் நடிகை.. தீராத மோகத்தால் அரங்கேறிய கொடுமை..!

இப்படி எல்லாம் நடக்குமா என்று திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது கண் நடிகையின் சமாச்சாரம். பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த பிரபலமான அந்த கண் நடிகை தன்னுடைய 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணமான 2 ஆண்டுகளில் கணவர் மறைந்து விட தற்போது வயது 40 தாண்டிவிட்ட போதிலும் இன்னும் மறுமணம் செய்து கொள்ளாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் அந்த மீன் நடிகை. என்னதான் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட சொல்லிக் கொள்ளும்படியான சொகுசு வாழ்க்கை நடிகைக்கு அமையவில்லை.

இவருக்கு கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்துமே குணசத்திர வேடங்களாக இருப்பதால் லட்சங்களில் மட்டுமே சம்பாதித்து வந்திருக்கிறார். ஆனால், அம்மணி சொகுசு வாழ்க்கைக்கு ஏங்கி தவித்து இருக்கிறார்.

இந்த நேரத்தில் அக்கட தேசத்தின் வயதான தயாரிப்பாளர் ஒருவருடன் நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பின் மூலம் அவருடன் நெருக்கமாகி இருக்கிறார். இவர்களுடைய அந்த நெருக்கம் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறது.

அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்தவர். முதல் திருமணத்தை முறைப்படி விவாகரத்து செய்து இருக்கிறார். ஆனால், இரண்டாவது மனைவியை இதுவரை விவாகரத்து செய்யவில்லை.

சில திரைப்படங்களை இயக்கியிருக்கும் இந்த தயாரிப்பாளர் மிகப்பெரிய சொத்துக்கு சொந்தக்காரர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா என இவருடைய அசையா சொத்து மதிப்பு மட்டும் 1500 கோடியை தாண்டுமாம்.

முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.. இரண்டாம் மனைவிக்கு ஒரு குழந்தை.. என தாராள பிரபுவாக இருந்த இவர் முதல் மனைவிக்கு பெரிய தொகையை கொடுத்து செட்டில் செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார்.

ஆனால் இரண்டாவது மனைவிக்கு எந்த ஒரு செட்டில்மெண்டும் கொடுக்காமல்.. விவாகரத்தும் கொடுக்காமல்.. ஏமாற்றி வருகிறார். இதற்கான சட்ட போராட்டத்தில் இருக்கிறார் அவருடைய இரண்டாவது மனைவி.

ஆனால் சொகுசு வாழ்க்கைக்காக ஏங்கி கொண்டிருந்த இந்த கண் நடிகை அவரை எப்படியாவது சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து தன்னுடைய அடுத்த கட்டத்தை நகர்த்தி வேண்டுமென்றே அவர் மூலம் கர்ப்பமாகி இருக்கிறார் என்ற தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

இதனால் மிரண்டு போன இந்த தயாரிப்பாளர் கண் நடிகையிடம் பேரம் பேசி 20 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்திருக்கிறார். ஆனால் கண் நடிகையின் எதிர்பார்ப்பு முழுதும் அவருடைய முழு சொத்தின் மீதும் இருக்கிறது.

நான் உங்களை திருமணம் செய்து ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம். மேலும், இங்கே இருந்தால் அவருடைய பண பலத்தை கொண்டு என்னுடைய கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்து விடுவாரோ என்று பயந்து போன கண் நடிகை தற்போது தீவு ஒன்றில் தன்னுடைய தோழியான சக சினிமா நடிகை ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறார் என்றும் குழந்தை பெற்றுக் கொண்டு இவரை திருமணம் செய்து ஆவது என்ற முடிவில் இருக்கிறார் என்றும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருக்கின்றன.

கண் நடிகை தன்னை அக்கறையாக பார்த்துக் கொள்கிறார் என்று அரவணைத்த தயாரிப்பாளருக்கு அவருடைய தீராத மோகம் இப்போது தீராத சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version