ஹீரோ, தயாரிப்பாளர்கள் மட்டுமில்ல.. நடிகைகள் இவங்களையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்றாங்களாம்..?

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா துறையில் நிலைக்க முடியும் என்று பல்வேறு நடிகைகள் தங்களுடைய வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னணி நடிகைகள் யாருமே இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது கிடையாது. பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கக்கூடிய நடிகைகள்.. மார்க்கெட் அவுட் ஆன நடிகைகள்.. ஏற்கனவே முன்னணி நடிகைகளாக இருந்து தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள்.. இப்படி ஃபீல்டு அவுட் ஆன நடிகைகள் தான் இப்படியான புகார்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மழுப்பும் முன்னணி நடிகைகள்

சம காலத்தில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளிடம் இது குறித்து கேட்டால் எங்களுக்கு இதுபோல நடந்தது கிடையாது.. ஆனால் சினிமா துறையில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது உண்மைதான்.. எல்லா துறையிலும் பெண்களுக்கு எதிரான இப்படியான விஷயங்கள் நடக்கிறது.. எனக்கு தெரிந்த சிலருக்கு இப்படியான விஷயங்கள் நடந்திருக்கிறது இது மாற வேண்டும் என்று மழுப்பலாக பதிலை கூறிவிட்டு நகர்ந்து சென்று விடுவார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க.. தற்பொழுது இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எப்படி என்றால்..? முன்பெல்லாம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் துணை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது.

விளம்பர படத்துக்கும்..

ஆனால் தற்பொழுது விளம்பர படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். சில நடிகைகளிடமே இது குறித்து நாம் கேட்டோம்,.. அவர்களும் நாம் உண்மைதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் படத்தின் ஹீரோ அதிகபட்சமாக இயக்குனர் ஆகியோரை சமரசம் செய்து கொண்டால் போதும் என்ற சூழ்நிலை தான் இருந்தது. ஆனால், தற்பொழுது படத்தின் ஆடிஷன் செய்து ஆள் தேர்வு செய்யக்கூடிய காஸ்டிங் டைரக்டரில் இருந்து படத்தில் பணியாற்றக்கூடிய கேமராமேன் மற்றும் டெக்னீசியன்கள் வரை நடிகைகளை பகிர்ந்து பந்தாடுகிறார்கள் என்ற விபரம் நம்மை வியக்க வைக்கிறது.

மேலும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் மிகப்பெரிய அளவிலான தொகையை சம்பளமாக பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னணியிலும் அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிறுவனங்கள் நடிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து தாங்கள் விரும்பும் நேரத்தில் அவர்களை வரவழைத்து ஆசை தீர வேட்டையாடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

தனி கடற்கரை பங்களாவில்..

இதற்காக வெளிநாடு, நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் போவதில்லை. இதற்காகவே கடற்கரை பங்களாக்களை கட்டி விட்டிருக்கின்றன குறிப்பிட்ட நிறுவனங்கள். அங்கே நடிகைகளை அழைத்து சென்று விடிய விடிய விருந்து வைத்து அனுப்புகிறார்களாம்.

இப்படி பல்வேறு முன்னணி நிறுவனங்களிடம் பல்வேறு நடிகைகள் சிக்கி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடும் பொழுது மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி விடும் நடிகைகளிடம் சில அதிகாரப்பூர்வமான கண்டிஷங்களையும் போட்டு விடுகின்றனவாம் நிறுவனங்கள்.

அது என்னவென்றால்.. எந்த நேரத்தில் நீங்கள் எங்களுடைய ஒப்பந்தத்தை மீறினாலோ அல்லது முறித்துக் கொண்டாலோ.. அந்த நாளுக்கு உண்டான சம்பளத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்பதுதான் அந்த முக்கியமான புள்ளி.

எனவே நிறுவனங்கள் சொல்வதைக் கேட்காமல் போனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள நேரிட்டால் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமே என்ற சிக்கலில் பல நடிகைகள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு.. செக்கு மாடு பொழப்பு..

சம்பளமாக பெற்ற பணத்தை சொகுசு கார் வாங்குவது, வீடு கட்டுவது வேறு இடங்களில் முதலீடு செய்வது போன்றவற்றை செய்து விட்டு தற்போது செய்வது தெரியாமல் திகைத்து வருகிறார்களாம் சில நடிகைகள்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிறுவனங்கள் விதிக்கும் கட்டளைகளுக்கு செக்கு மாடாக மாறி விடுகிறார்கள் நடிகைகள் என்று உச் கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இப்படி வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் கலாச்சாரம் திரைப்படங்களில் தொடங்கி சீரியல் வரை வந்தது தற்போது விளம்பர படங்களையும் கூட புகுந்து விட்டது என்ற விபரம் உண்மையிலேயே புதிதாக சினிமா அல்லது மீடியா துறையில் பயணிக்க வரும் பெண்களுக்கு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலுக்கு என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version