அந்த இடத்தை நீங்க தான் மாமா புடிக்கணும்.. திரும்பி வரும் வெளிச்ச நடிகரின் தீப மனைவி.!

திரை உலகில் மட்டுமல்ல பல துறைகளிலும் போட்டி அதிகரித்து வருகின்ற வேளையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீப மனைவி சொல்லி இருக்கும் விஷயம் தற்போது பரவலாக பரவி விட்டது.

ஏற்கனவே திரை உலகில் நாலா பக்கமும் போட்டிகள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எப்படியாவது ஜெயித்து தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் பலரும் போட்டா போட்டி போட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த இடத்தை பிடிக்கணும் ..

அந்த வகையில் இந்த போட்டியே வேண்டாம் என்று ஏரியாவை காலி செய்து வேறொரு மாநிலத்தில் பெரிய ஹீரோவாய் மாறிவிடலாம் என்று சென்ற வெளிச்ச நடிகரை மீண்டும் அதே ஊருக்குள் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் மாமா என்ற பேச்சோடு கிளம்பி வர தயாராகி இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் செய்திகள் வெளி வந்துள்ளது.

இந்நிலையில் விருது இயக்குனருடன் வெளிச்ச நடிகர் நடிக்க வேண்டிய படம் வெகு நாட்களாக இழுபறியில் தள்ளிப் போய் வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கணவனை தேடி வந்து கொண்டிருக்கக் கூடிய வேளையில் தீப மனைவி முதலில் படத்தை ஆரம்பித்து விடுங்கள்.

இது தான் ரைட் டைம் என்று அவரை உசுப்பேத்தி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் வந்துள்ளது.

இதற்குக் காரணம் ஏற்கனவே முதல் இரண்டு இடத்தில் அந்த மாஸ் ஹீரோவும் டாப் ஹீரோவும் இருந்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்த வெளிச்ச நடிகர் தற்போது அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த வெளிச்ச நடிகரின் இடம் சராசரவென்று கீழே இறங்கி விட்டது.

தீப மனைவி வேண்டுகோள்..

இந்த சூழ்நிலையில் தான் இனி மேல் இந்தப் பகுதி தனக்கு செட்டாகாது என்று மனைவி கூறிய காரணத்தைக் கேட்டு பெரிய குடும்பத்தில் இருந்து விலகி மனைவி பேச்சைக் கேட்டு அவரோடு கிளம்பி விட்டார்.

இந்நிலையில் தற்போது தனது கணவரை மீண்டும் பழைய இடத்திற்கே அழைத்து வந்து போட்டியில் களம் இறங்கி கணவரை அந்த இடத்தில் நிலை நிறுத்த தீப நடிகை முடிவு செய்து விட்டதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளது.

அத்தோடு அந்த விருது இயக்குனருடன் கமிட்டான படத்தை சரியான சமயத்தில் லாக் செய்து ஆரம்பிக்க வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தீப நடிகை கொடுத்திருப்பதால் விரைவில் படம் தொடங்கிவிடும் என்ற பேச்சுக்கள் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் ஊரு விட்டு ஊரு போனாலும் கடைசியில் உங்களை வாழ வைக்கும் தமிழகத்தை நோக்கித்தான் நீங்கள் வரவேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் எதையோ கணக்கு பண்ணி தீப நடிகை செய்த செயல் தற்போது தவறு என்று புரிந்திருக்கும். எனவே தான் மீண்டும் குடும்பத்தோடு இணைந்து களை கட்ட வருகிறார் என்று பேசி வருகிறார்கள்.

அது சரி இனியாவது அந்த வெளிச்ச நடிகருக்கு நல்ல வாய்ப்புக்கள் அமைந்து மீண்டும் பழைய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா? இல்லை மனைவி சொல்லி மந்திரம் என்று யோசிக்காமல் முடிவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version