கடந்த பத்து ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி என்பது மிக அதிகமாக மாறி இருக்கிறது என்பதே தற்சமயம் பெரும்பாலான சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல கடந்த பத்து வருடங்களில் சினிமாவில் நடிகர்களுக்கான சம்பளம் என்பதும் மிக அதிகமாக அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் சினிமாவின் வளர்ச்சி வேற இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இல்லை சினிமாவின் வளர்ச்சி ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் காந்தராஜ்.
முழு நேர வேலையே இதுதான்
முன்பு இருந்ததைவிட தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டியது இப்போது அதிகரித்து இருக்கிறது. இதற்காக பல விஷயங்களையும் பிரபலங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் பொழுது ஒரு விவாகரத்து பிரச்சனையை எதற்கு இவ்வளவு பெரிய பிரச்சினையாக வேண்டும். அதன் மூலமாக விளம்பரம் தேடிக் கொள்ள நினைக்கின்றனர். அதேபோல பிரபலம் ஒருவர் தாய்லாந்தில் போய் கல்யாணம் செய்ததை சமீபத்தில் பார்க்க முடியும் ஏன் சென்னையிலே திருமணத்தை நடத்தி இருக்கலாமே.
நடிகையை புக் பண்ணி
அப்படியெல்லாம் செய்தால்தான் மக்கள் மத்தியில் பப்ளிசிட்டி இருக்கும் தொடர்ந்து அதன் மூலம் சினிமாவிலும் இருந்து கொண்டு இருக்க முடியும் அந்த காலங்களில் எல்லாம் பாலிவுட்டில் பல நடிகர்கள் நடிகைகளை வைத்துக்கொண்டனர். நான்கு ஐந்து ஆண்டுகள் எல்லாம் தொடர்ந்து அந்த நடிகைகளை புக் பண்ணி வைத்துக்கொண்டு தொடர்பில் இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பாருங்கள் எந்த நடிகரும் அப்படி இருக்கமாட்டார் ஏனென்றால் அவர்கள் மார்க்கெட்டை அது காலி செய்துவிடும் மேலும் அந்த நடிகைகளுக்கு செலவு செய்யும் அளவுக்கு எல்லாம் இப்பொழுது நடிகர்கள் இல்லை.
உண்மையை உடைத்த பிரபலம்
இதுதான் இப்பொழுது சினிமாவின் நிலைமையாக இருக்கிறது எப்பேர்பட்ட நடிகர் அமிதாப்பச்சன் அவரே இப்பொழுது தமிழ் சினிமாவில் வந்து நடித்திருக்கிறார். நம்ம ஊரில் பெரிய நடிகரான ரஜினிகாந்த் பப்ளிசிட்டிக்காக அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று அங்கு டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார்.
இந்த அளவிற்கு ஒரு வீழ்ச்சியைதான் தற்சமயம் சினிமா கண்டிருக்கிறது அதனால்தான் நயன்தாரா மாதிரியான நடிகைகள் எல்லாம் சினிமாவை மட்டும் வைத்துக் கொள்ளாமல் வேறு தொழில்களையும் பார்த்து வருகின்றனர் என்று கூறுகிறார் காந்தராஜ்.