வழக்கில் இருந்து தப்பிக்க பூ நடிகையை விருந்தாக்கிய மேலிடம்..! செஞ்சோற்று கடன் தீர்க்க இணங்கிய கேவலம்..!

தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று பெரும் உயரத்தை தொட்ட போதும் கூட இந்த பூ நடிகை தமிழில் வளர்ச்சியை காணாமல் தற்சமயம் அக்கட தேசத்தில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறார்.

அரசியல் தொடர்பாக தமிழ்நாட்டில் கிடைக்காத வாய்ப்பு இவருக்கு அக்கட தேசத்தில் கிடைத்ததை எடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அம்மணி. இந்த நிலையில்  வழக்குகள் தொடர்பாக அம்மணி செய்த விஷயங்கள்தான் இப்பொழுது பேசுப்பொருளாக இருந்து வருகிறது.

அரசியல் வரவேற்பு:

அக்கட தேசத்தில் இந்த நடிகைக்கு அமோகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வரவேற்பு மூலம் அரசியலில் பெரிய இடத்தை பிடித்து தற்சமயம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார் இந்த பூ நடிகை.

ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் கூட தனக்கு வந்த கடமைகளை சரியாக செய்யாமல் கேப்பில் எல்லாம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அதிலேயே ஆர்வத்துடன் இருந்து வருகிறாராம் பூ நடிகை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அவரது பெயரை அவரே கெடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பொதுமக்கள் அவர்களது கோபத்தை திரும்ப காண்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து எக்கச்சக்கமான வாக்குகளை இழந்து படுதோல்வி அடைந்தார் இந்த பூ நடிகை.

ஆட்சியில் செய்த தவறுகள்:

ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்களை அதிகமாக சேர்த்து வைத்திருந்தார் என்று பொதுமக்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அம்மணி சார்ந்த கட்சியின் மேலிடமே இதில் நேரடியாக தொடர்புபட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக வரும் வழக்குகள் கழுத்தை நெரிக்கும்படி இருக்கும் என்று தெரிந்து கொண்ட மேலிடம் அந்த தவறை எல்லாம் பூ நடிகைதான் செய்தார் என்று அவரை கைகாட்டிவிட்டு இவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று செஞ்சோற்று கடன் தீர்க்க மேல் இடத்தின் உத்தரவிற்கு பணிந்து மேல் இடத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் செய்யாத தவறுகளை கூட செய்ததாக கூறி சரண்டராக இருக்கிறாராம் இந்த நடிகை.

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்பது போல இந்த பூ நடிகை தற்சமயம் தவறான கட்சியில் சேர்ந்ததால் தற்சமயம் வஞ்சத்தில் விழுந்திருக்கிறார்.

உடனடியாக பூ கட்சியில் சேர்ந்து விட்டால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவருடைய நெருங்கிய தோழிகள் சிலர் அம்மணிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய கட்சியின் மேல் உள்ள விருப்பத்தின் பெயரில்தான் தன்னையே வழிகடாவாக கொடுக்க துணிந்திருக்கிறார் நடிகை. இந்த நிலையில்  கட்சி மாறுவதா? இல்லை அந்த கட்சியிலேயே இருப்பதா? என்பதை யோசித்து யோசித்து தூக்கத்தை தொலைத்து வருகிறாராம் பூ நடிகை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version