மாஸ்டர் நடிகரின் அரசியல் நுழைவு பெரிய பெரிய அரசியல் தலைவர்களின் தூக்கத்தை காவு வாங்கியுள்ளது என்பதை அரசியல் வட்டாரங்களில் பிரபலமாக இருக்கும் நண்பர்களிடம் இருந்து வரக்கூடிய வாய்வழி செய்திகள் மூலம் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
மாஸ்டர் நடிகரை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று திரைத்துறையினரை வைத்து காய் நகர்த்தும் முடிவில் இருந்த சில அரசியல் தலைவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று கூறுகிறார்கள்.
திரைத்துறையில் இருப்பவர்களை வைத்தே மாஸ்டர் நடிகரை விமர்சிக்க சொல்வது என்ற முயற்சியில் அவர்கள் தோல்வியே கண்டுள்ள்ளனர். பெரும்பாலான நடிகர்கள் மாஸ்டர் நடிகர்களை விமர்சிக்க நாங்கள் தயார் இல்லை என்று பின்வாங்குவதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள் பெரிய தலைகள் என்று கூறுகிறார்கள்.
ஏதாவது ஒன்று செய்தே ஆக வேண்டும் என்று இரவு பகல் பாராமல் தனி குழுவை வைத்து ஆலோசனை செய்து வரும் அவர்கள் மாஸ்டர் நடிகரின் ரசிகர்களை தூண்டி விட்டாலே போதும் அவர்களே அவர்களுடைய கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்கி விடுவார்கள்.
லேசாக ட்ரிகர் பண்ணா..
லேசாக அவர்களை ட்ரிகர் செய்து விட்டால் போதும்.. நாம் எதையும் செய்ய அவசியம் கிடையாது.. ஏதாவது ஒரு விஷயத்தில் அவர்களை ட்ரிகர் செய்துவிட்டு அவர்களுடைய ரியாக்ஷனை பெரிய செய்தியாக மாற்றி.. இவர்கள் மீது வெகுஜன மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம் என பலே திட்டத்துடன் தங்களுடைய ஐடி விங்குகளை களமிறக்கி விட்டு இருக்கிறார்கள் என தெரிகிறது.
இங்கே விஷயம் என்னவென்றால், இதெல்லாம் மீடியாவின் கவனத்திற்கு வருவதற்கு முன்பாகவே மாஸ்டர் நடிகருக்கு தகவல் சென்று விடுகிறது என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய ஹைலைட்டான விஷயம்.
அரசியலில் யார் யார் நமக்கு எதிராக என்ன காய் நகர்த்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தனி குழுவே வைத்திருக்கிறார் மாஸ்டர் நடிகர் என்று கூறப்படுகிறது. எனவே தான் இந்த ரசிகர்களை தூண்டிவிட்டு தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் மற்ற கட்சிகளின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக தன்னுடைய ரசிகர்களுக்கு கட்டளை ஒன்றை போட்டு இருக்கிறார் மாஸ்டர் நடிகர் என்று கூறுகிறார்கள்.
யார் என்ன கூறினாலும் அவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது அவர்களுடன் சண்டைக்கு செல்லக்கூடாது மக்கள் பிரச்சினை பற்றி மட்டும் பேசுங்கள் அவர்களுடன் சண்டை போடுவது நமக்கு எந்த வகையிலும் பலன் தரப்போவதில்லை என்பதை மீடியாவில் அறிவித்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் வட்டம் மாவட்டம் கிளை கிராமம் என தன்னுடைய நிர்வாகிகளுக்கும் ஆர்டரை தனிப்பட்ட முறையில் அனுப்பி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நம்முடைய திட்டம் இவருக்கு எப்படி தெரிந்தது..? என குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் பெரிய தலைகள்.
மீ டூ பேட்டி..
உச்சகட்டமாக.. அடப்பாவிங்களா.. என்று விழி பிதுங்க வைக்கும் அளவுக்கு ஒரு தகவலும் சுற்றி வருகிறது. ஆம், யாரையாவது வைத்து ஒரு மீ டூ பேட்டியை போட்டு விடலாமா என்றெல்லாம் கூட ஆலோசனைகள் நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத வாய்வழி தகவல்களை நம்மால் கேட்க முடிகிறது. இது நமக்கு தெரிகிறதோ இல்லையோ நிச்சயமாக மாஸ்டர் நடிகரின் தரப்புக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
அரசியல் என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக இந்த காலத்தில் இல்லை. பல்வேறு ஊடகங்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பாக இயங்கும் இந்த காலத்தில் தனி ஆளாக தன்னுடைய ரசிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு நீந்தி கரை சேர்ந்து விடுவாரா மாஸ்டர் நடிகர் என்பதை பொறுத்திருந்தான் தான் பார்க்க வேண்டும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாஸ்டர் நடிகர் அரசியல் விட்டு நீக்கிவிட வேண்டும் அல்லது நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குடைச்சல்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெரிய தலைகள்.
அடுத்த இரண்டு வருடங்களில் என்ன நடக்கப் போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பதை தவிர தற்போது சொல்வதற்கு வேறு ஒன்றும் கிடையாது.