Site icon Tamizhakam

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிகளை தந்த வண்ணம் உள்ளது.

 

அந்த வகையில் தற்போது அவள் எனக்குத்தாண்டா என நடு நம்பர் நடிகைக்காக நடுரோட்டில் அடித்துக் கொண்ட நடிகர்கள் பற்றிய சூடான விஷயத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அவ எனக்கு தாண்டா..

நம்பர் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. சின்ன நம்பர் நடிகை, பெரிய நம்பர் நடிகை என ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்க இடையில் நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று நடு நம்பர் நடிகையும் பல்வேறு காதல் கிசுகளில் சிக்கிருக்கிறார்.

இவர் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் காதல் வயப்பட்ட அம்மணி ஆரம்பத்தில் அவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.

அந்த காலத்தில் அந்த காலகட்டத்தில் அவருடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவருக்கு மது ஊற்றி கொடுப்பது மேற்படி சமாச்சாரங்கள் என நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார் அம்மணி.

இவர்களுடைய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது காதலானதும் இருவரும் தங்களை மறந்து காதல் பறவைகளாக சுற்றி திரிந்தனர். படப்பிடிப்பு நடந்தால் என்ன…? நடக்கா விட்டால் என்ன…? என்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தனர் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியானது.

குறிப்பாக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுநம்பர் நடிகையை இயக்குனர் ஏதோ கோபமாக பேசிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக படக்குழுவிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார்கள்.

நடு நம்பர் நடிகைக்கு நடுரோட்டில் அடித்துக் கொண்ட நடிகர்கள்..

ஊட்டியில் இருந்து சென்னை வரும் வழியில் மாங்கனி நகரத்திலேயே இரண்டு நாட்கள் தங்கி தங்களுடைய காதலை கொண்டாடி இருக்கின்றனர்.

இப்படி கொண்டாடி தீர்த்த இவர்கள் திருமணத்திற்கு முன்பு கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வது என்ன முடிவு எடுத்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சில மாதங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது இருவரும் சேர்ந்து தங்குவதற்கு கடற்கரை ஒன்றில் நிலம் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிலம் எப்படி வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தாலே இவர்களுக்குள் காதலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வீடு தான். ஆனாலும் பக்கத்து பக்கத்து நிலமாக பாதி நிலம் நடிகையின் பெயரிலும் மீதி நிலம் நடிகரின் பெயரிலும் வாங்கப்பட்டிருக்கிறது. கணவன் மனைவியாக வாழ்பவர்கள்.

யாராவது ஒருவர் போரிலோ அல்லது ஒரே நிலமாக இருவர் பேரிலோ பத்திரத்தை பதிவு செய்யவில்லை. பக்கத்து பக்கத்து நிலம். பாதி மனைவி பெயரிலும்.. மீதி கணவன் பெயரிலும் வாங்கி இருக்கிறார்கள்..

அப்படி என்றால் இவர்களுடைய காதலின் லட்சணம் என்ன..? என்று இணைய பக்கங்களில் பல சினிமாத்துறை பத்திரிகையாளர்கள் நறுக் கேள்விகளை எழுப்பினார்கள்.

இந்த கூத்து ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. கடைசியாக இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து சென்றனர்.

அடக்.. கொடுமையே..

இந்நிலையில், பிரிந்து சென்ற அந்த வெற்றியின் நடிகர் மீண்டும் நடுநம்பர் நடிகையை சேர்ந்து வாழ்வதற்கு நச்சரித்து வருகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், கலட்டி விட்டுப் போன நம்பர் நடிகை பாதுகாப்பாக எடுத்து தன்னோடு வைத்துக் கொண்டிருப்பவர்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான தெலுங்கு இயக்குனர் ஒருவர். இவரும் ஒரு நடிகரும் ஆவார். சமீபத்தில் இந்த இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

உச்ச கட்டமாக.. அவ எனக்கு தான்டா என்று இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இது தான் தற்போது தெலுங்கு சினிமாவில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

Exit mobile version