அம்மா கதாபாத்திரத்திற்கு கூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேக்குறாங்க.. புலம்பும் பிரபல சீனியர் நடிகை..!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு வகையான திரைப்பட துறைகளில் தற்போது அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பல்வேறு வகையான கிசு கிசுக்கள் தினம், தினம் வெளி வந்து பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகள் ஒவ்வொரு துறையிலும் தற்போது தினுசு தினசாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் திரைத் துறையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்ட நடிகை ஒருவர் புலம்பிய விஷயம் வைரலாகி உள்ளது.

சினிமா துறையே இப்படிதான்..

இந்த சீனியர் நடிகை தற்போது சினிமா வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் கிடைக்கின்ற அம்மா கேரக்டர்களையும், மேலும் பல துணை கேரக்டர் ரோல்களையும் செய்து வருகிறார்.

இதனை அடுத்து இந்த நடிகைக்கு பக்கத்து மாநிலத்தில் ஒரு ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தை அடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் இவர் ஒரே வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு மூட் அவுட் ஆகியதாக தகவல்கள் வந்துள்ளது.

இதற்குக் காரணம் அவர் அந்த படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குனர் அந்த சீனியர் நடிகைக்கு எக்கச்சக்க டார்ச்சர் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அம்மா கேரக்டருக்கு கூட அட்ஜெஸ்ட்மெண்ட்..

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் எல்லாம் இருந்தாலும் குறிப்பாக நடிகைகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என தனது கஷ்டத்தை சக நடிகையிடம் புலம்பி இருக்கக் கூடிய இந்த சீனியர் நடிகை ஹீரோயினியாக நடிக்கும் போது செம பிஸியாக இருந்தார்.

இதனை அடுத்து தான் திருமணம் செய்து கொண்ட இயக்குனரை விவாகரத்து செய்த நிலையில் அவரது மார்க்கெட் காலியானதை அடுத்து அம்மா பாத்திரத்தில் கூட மறுப்பு சொல்லாமல் நடிக்க கூடிய இவர் வயது ஆனாலும் இளமை மாறாமல் ஃபிட்னஸ் – ஐ மெயின்டைன் செய்து வருகிறார்.

குழம்பித் தள்ளும் சீனியர் நடிகை..

இந்நிலையில் இந்த சீனியர் நடிகையை பார்க்கும் பலரும் இவர் அனைத்துக்கும் அட்ஜெஸ்ட் செய்து போய்விடுவார் என்ற எண்ணத்தில் அவரிடம் விவகாரமாக நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சிங்கிளாக இருப்பதால் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிக அளவு பேசுவது ஈஸியாகிவிட்டது.

இப்படி நாகரீகம் இல்லாமல் பேசுவது நடிகையை கஷ்டப்படுத்தும் என்று தெரியாமல் புதுப்புது வகைகளில் இது போன்ற தொல்லைகளை தர ஆரம்பித்ததை அடுத்து ஒரு வாரம் சூட்டிங் சென்ற அந்த சீனியர் நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி நேரடியாகவே உதவி இயக்குனர்கள் மூலம் தூது விட்ட விஷயத்தை சொல்லி கடுப்பாகிவிட்டார்.

அத்தோடு சில நாட்கள் சென்றால் சீனியர் நடிகை எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்து விடுவார் என்று ஆசையாக இயக்குனர் போட்ட கணக்கு தப்பாக விவகாரம் பெரிதாகி நடிகை அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டு அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஷாக்கிங் ஆன ரசிகர்கள் அனைவரும் தற்போது அம்மா கதாபாத்திரத்திற்கு கூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்களா? என்று அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை நண்பர்களோடு ஷேர் செய்து இந்த விஷயத்தை பேசும் பொருளாக்கி விட்டார்கள்.

அத்தோடு அந்தப் படமே வேண்டாம் என்று ஒதுங்கிய அந்த சீனியர் நடிகை செயலில் அர்த்தம் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வரைவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க ஏதாவது ஒரு வழியை விரைவில் கண்டுபிடித்தால் தான் திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version