அதுக்கு ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி.. கடைசியில் உள்ளதும் போச்சு.. நரக வேதனையில் நடிகை..!

சினிமாவில் எப்படி இருந்தாலும் கதாநாயகர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கதாநாயகிகளுக்கு அப்படி கிடையாது. அவர்களது உடல் அமைப்பிலிருந்து நிறம் வரைக்கும் பல விஷயங்கள் ஒரு கதாநாயகிக்கான தகுதியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கதாநாயகர்களை பொருத்தவரை விஜய் சேதுபதி மாதிரி உடல் பருமனாக இருந்தாலும் சரி, தனுஷ் மாதிரி உடல் ஒல்லியாக இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் நடிகைகளை ஒல்லியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிக உடல் பருமனோடு இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் தொடர்ந்து அவர்கள் உடலை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கதாநாயகிகளுக்கு இருக்கும் பிரச்சனை:

மேலும் முக அழகையும் சரியாக பராமரிக்க வேண்டும். அவர்களது முகத்தில் தழும்புகளோ கீறல்களோ ஏற்பட்டுவிட்டால் பிறகு தமிழ் சினிமாவில் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும். இதே போல சில நடிகைகள் தங்களை அழகுபடுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி என்கிற செயற்கை முக அறுவை சிகிச்சையையும் செய்வது உண்டு.

சில நடிகைகள் உதட்டிற்கு மேல் மச்சம் வேண்டும் என்பதற்காக இப்படியான சிகிச்சை செய்வார்கள். இப்படி தங்களது அழகை கூட்டிக் கொள்ள இந்த மாதிரியான சிகிச்சைகளை செய்வது நடிகைகள் மத்தியில் சகஜமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

ஆனால் எல்லோருக்கும் அது கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியான விஷயம்தான். ஏனெனில் சில நேரங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி முறை முகத்தின் அழகையே அலங்கோலமாகிவிடும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

தவறாக முடிந்த சிகிச்சை:

இப்படி தன்னுடைய அழகை கூட்ட வேண்டும் என்று உதட்டை பெரிதாக்குவதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகுபடுத்த நினைத்திருக்கிறார் பிரபல சீரியல் நடிகை. ஆனால் அந்த சிகிச்சை முறை அவரது உதட்டை அதிகமாக பெரிதாக்கியதால் பார்ப்பதற்கு மோசமாக மாறி இருக்கிறது.

அவருடைய முகம் தற்சமயம் மோசமாக மாறியுள்ளது. அந்த நடிகை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து இவர் நடித்தும் வருகிறார். இதற்கு நடுவே சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

டிவி சீரிஸ் ஒன்றில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சினிமாவில் இன்னும் அதிக பிரபலம் ஆவதற்காகதான் அவர் இந்த உதடு சிகிச்சையே செய்திருக்கிறார். ஆனால் அது இப்படி அவருக்கே பிரச்சனையாக மாறி அதனால் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியிருக்கின்றன.

மேலும் பலரும் அவரது உதட்டை பார்த்து கிண்டல் செய்யவும் துவங்கியிருக்கின்றனர். இந்த கிண்டலால் வேதனை அடைந்தாலும் கூட அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த பிரபலம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version