ஹீரோ மார்கெட் புட்டுக்கினு போச்சு.. இதுல தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வேற.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாக நடித்தாலும் கூட அதற்கு பெரிதாக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதே சமயம் வில்லனாக நடிக்கும் போது அந்த படங்கள் வேற லெவலில் ஹிட்டு கொடுக்கின்றன.

இதனால் கடுப்பான அந்த நடிகர் தற்சமயம் முழு நம்பிக்கையுடன் தனது படத்துக்கான பெரிய பிரமோஷனில் இறங்கி உள்ளாராம். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அதிக செலவுகளை செய்து பெரும் நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு வந்து இறக்கி இருக்கிறாராம் இந்த ஹீரோ.

தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி:

இதனால் ஏற்கனவே தயாரிப்பாளர் நெஞ்சை பிடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த விஷயத்திலேயே செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த ஹீரோ தேவையில்லாத செலவுகளில் நம்மை இழுத்து விடுகிறாரோ என்று வேதனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

இந்த பாலிவுட் பிரபலங்களை கொண்டு வந்ததில் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய் தண்டமாக செலவாகி உள்ளதாம். எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்கும் போதெல்லாம் எவ்வளவு பணம் செலவு செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. அதைவிடவே அதிகமாக பணத்தை அள்ளுவீங்க என்று ஓவர் பில்டப் கொடுத்து வருகிறாராம் இந்த நடிகர்.

ஆனால் அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் வருமா? என்பது தயாரிப்பாளருக்கே சந்தேகமான ஒரு விஷயமாகதான் இருக்கிறதாம். ஏனெனில் இந்த கதாநாயகன் ராசி அப்படி, ஏற்கனவே இந்த மாதிரி பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு அது பெரும் தோல்வியில் எல்லாம் முடிந்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

பயப்படும் தயாரிப்பாளர்:

எனவே அதிக செலவில் பணத்தை கொட்டி படம் எடுக்காமல் குறைவான செலவில் ஒரு படத்தை எடுத்து அதன் மூலம் அதிக பணத்தை எப்படி ஈட்டுவது என்று பார்க்கலாம் என்று கதாநாயகன் பார்ப்பதே நல்லது. ஆனால் அந்த நடிகரோ தயாரிப்பாளருக்கு தொடர்ந்து செலவுகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் மட்டும் ஓடாமல் போய்விட்டால் தயாரிப்பாளர் இதோடு தலையில் துண்டை போட்டு கொண்டுதான் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நடிகரின் திரைப்படத்தை சோலவாக ரிலீஸ் செய்வதற்கும் ப்ளான் செய்திருக்கின்றனர்.

அதனால்தான் அந்த ஒல்லி நடிகரின் திரைப்படம் தள்ளிப்போகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படத்தை எடுத்து கொண்டு போய் வெளிநாட்டில் பிரமோஷன் செய்ய போகிறேன் என்று கூறிய நடிகர் தயாரிப்பாளருக்கு அடுத்த குண்டை போட்டு இருக்கிறாராம்.

வெளிநாட்டை விட உள்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டில் திரைப்படத்தை ஏன் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் கேள்வியாக இருந்து வருகிறதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version