எதிரி நடிகையுடன் கூட்டணி சேர்ந்த தமாசு நடிகர்.. தயாரிப்பாளருடன் ரகசியமாக சேர்ந்து பழி வாங்கிய நம்பர் நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் இந்த நம்பர் நடிகையும் முக்கியமானவர். இவர் தொடர்ந்து சினிமாவில்  தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல நடிகைகளின் வாய்ப்புகளை கெடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அவருடன் நெருங்கிய நண்பராக இருந்த நடிகருக்கு துரோகம் செய்திருக்கிறார் இந்த நடிகை. இந்த தமாசு நடிகர் நிறைய நகைச்சுவை செய்து அதன்  மூலமாக சினிமாவில் பிரபலமடைந்து தற்சமயம் கதாநாயகனாகவும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பே இந்த தமாசு நடிகரும் நம்பர் நடிகையும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அந்த திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது.

முதல் பாக வெற்றி:

அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த தமாசு நடிகர் தான் இவரின் நகைச்சுவை காட்சிகளால்தான் அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில் தற்சமயம் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறாராம் தமாசு நடிகர். ஆனால் இரண்டாம் பாகத்தை அதே தயாரிப்பாளரிடம் செய்ய முடியாத காரணத்தினால் இரண்டாம் பாகத்திற்கு வேறு பெயர் வைத்து மீண்டும் அதே நம்பர் நடிகையை வைத்து இயக்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்.

இது குறித்து நம்பர் நடிகையிடம் சென்று பேசிய பொழுது தாறுமாறான சம்பளத்தை கேட்டிருக்கிறார் நம்பர் நடிகை. இந்த சம்பளத்திற்கு இவரை வைத்து படம் இயக்க முடியாது என முடிவு செய்திருக்கிறார் தமாசு நடிகர்.

இந்த நடிகைக்கு தற்சமயம் மார்க்கெட் இல்லை என்றாலும் சம்பளத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதாக அவர் தயாராக இல்லை இதனால் இந்த நடிகையின் எதிரி நடிகையான இன்னொரு நடிகையிடம் படத்தில் நடிப்பதற்கு கேட்டிருக்கிறார் தமாஷ் நடிகர்.

பழி வாங்கும் நடிகை:

இந்த விஷயத்தை அறிந்த நம்பர் நடிகை மிகவும் கோபமாக இருக்கிறார் அதாவது இந்த தமாஷ் நடிகருடன் இவர் சேர்ந்து நடித்த முதல் பாகமே வேறு ஒரு நடிகையிடம் இருந்து பிடுங்கப்பட்ட வாய்ப்பு தான் என்று கூறப்படுகிறது. பிரபல வாரிசு நடிகைதான் அந்த திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும் அவரின் வாய்ப்பை பிடுங்கிதான் இந்த நம்பர் நடிகை நடித்ததாகவும் அப்பொழுது பேச்சுக்கள் இருந்தது.

இந்த நிலையில் இந்த தமாசு நடிகர் தன்னுடைய எதிரி நடிகையிடம் சென்று பேரம் பேசியதை அறிந்த நம்பர் நடிகை தற்சமயம் முதல் பாகம் எடுத்த தயாரிப்பாளரிடம் சென்று என்னை வைத்து இரண்டாம் பாகத்தை தனியாக உருவாக்குங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்காக இந்த நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முன் வந்ததால் தயாரிப்பாளரும் உடனே ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் தயாரிப்பாளரும் வேகவேகமாக நடிகை கூறியதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இன்னும் இந்த படத்திற்கான இயக்குனரே தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் நிலையில் தமாஷ் நடிகரை பழிவாங்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தனியாக படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் இந்த நம்பர் நடிகை. இருந்தாலும் இவ்வளவு பழகிய நண்பர்களுக்கு இவ்வளவு மோசம் செய்யக்கூடாது என்று இந்த நடிகை குறித்து பேசி வருகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version