Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!

பெருத்திருக்கும் அறிவியல் ஆதிக்கம் தற்போது திரை அரங்குகளை இழுத்து மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் தமிழ் சினிமா அழிவின் விளிம்பில் உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவதில் வியப்பில்லை.


பலரையும் மகிழ்வித்து மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த திரைப்படங்களும், கருத்துக்களை சொல்லக்கூடிய திரைப்படங்களும் வெளி வந்த காலகட்டம் மாறி தற்போது தமிழ் சினிமாக்கள் ஏதும் திரையுலகுக்கு வராமல் தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ் சினிமா துறை..

அந்த வகையில் சினிமா தொழில் முடிவுக்கு வருகிறது என்றதும் பலருக்கும் எந்த ஒரு ஆச்சரியமும் இருக்காது. இதற்கு காரணம் தொலைக்காட்சி வந்த போது பல்வேறு தியேட்டர்கள் மூடப்பட்டது.

இதையும் படிங்க: முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..!

மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் மூடப்பட்டு திருமண மண்டபங்களாக மாறியதும், தொழில் கூடங்களாக மாற்றப்பட்டதும் உங்கள் நினைவில் இருக்கலாம்.

---- Advertisement ----


அதற்குப் பிறகு சமீப காலமாக அதிநவீன வசதியுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் நல்ல வருமானத்தை பெற்றது. ஆனால் ஓடிடி எப்போது ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கியதோ அன்று முதல் தியேட்டர் பக்கம் ரசிகர்கள் யாரும் வருவதில்லை என்ற நிலைமை தான் நிலவுகிறது.

குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் சென்று பார்க்க ரசிகர்கள் விருப்பம் கொள்கிறார்கள் அப்படி இல்லை என்றால் விமர்சன ரீதியாக வெற்றி பெறும் படங்களை மட்டுமே தியேட்டரில் சென்று பார்க்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு காட்சி அல்லது இரண்டு காட்சி அதிகபட்சம் இரண்டு நாட்கள் மட்டுமே அப்படியான படங்கள் சினிமா தியேட்டர்களில் வெளியிடக்கூடிய நிலைமைக்கு வந்து விட்டது.

படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்..

இதனை அடுத்து தமிழ் சினிமா படுத்து விட்டது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். இதற்கு முக்கிய காரணம் முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய சம்பளம் என்று கருத்துக்கள் உரக்க ஒலித்து வருகிறது. படத்தின் பட்ஜெட் 250 கோடி என்று விளம்பரம் செய்கிறார்கள்.


ஆனால் அதில் படத்தின் ஹீரோவுக்கே 100 கோடி சென்று விடுகிறது. அதனை அடுத்து ஹீரோயினிக்கு 50 கோடி, இசையமைப்பாளருக்கு 30 கோடி, இயக்குனருக்கு 20 கோடி என 200 கோடியும் சம்பளமாக சென்று விட்டால் மீதி இருக்கும் 50 கோடிகள் தான் படம் எடுக்கிறார்களா? என்று கேட்டால் அதுவும் இல்லை வெளிநாடுகளுக்கு செல்வது படத்துக்கு விளம்பரம் செய்வது என பெரும்பாலான செலவை அந்தத் தொகையை செய்து விடுகிறார்கள்.

இதனை அடுத்து படம் எடுப்பதற்கு என்று பார்த்தால் ஒரு 30 கோடியோ அல்லது இருபது கோடியோ தான் செலவு செய்கிறார்கள். இப்படித் தான் பல பலன்கள் வெளி வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

காரணம் என்ன அலசல்..

அது மட்டுமல்லாமல் ஒரு இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஹீரோ என்றால் கூட படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அவர் படங்கள் மொத்தமாக வசூல் செய்வது 30 கோடி அல்லது 35 கோடி என்பதே பெரிய விஷயம்.

அவருக்கு சம்பளமாக 20 கோடி சென்று விட்டால் எங்கே தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி லாபகரமாக பணத்தை பார்க்க முடியும். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் சினிமாவை வேண்டாம் என்று தற்போது ஒதுங்கி சென்று விட்டார்கள்.


படம் எடுக்கும் பணத்தில் நிலம் வாங்கி போட்டால் பத்து வருடத்தில் மூன்று மடங்காக மாறிவிடும். பணத்தை படத்தில் போட்டால் அது மூன்றே மாதத்தில் காணாமல் போய்விடும் என்ற நிலையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் உட்கார வேண்டும் என்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்கள் சினிமாவை தயாரிக்க முன் வருவது கிடையாது.

இதையும் படிங்க: உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை யாஷிகா ஆனந்த்..! பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.,.

இதனால் ஒரே படத்தை இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கும் நிலைக்கு இன்றைய சினிமா உலகம் தள்ளப்பட்டு இருக்கிறது. ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் எப்போது சம்பளத்தை குறைக்கிறாரோ அப்போது தான் சினிமா வளரும். அப்படி இல்லை என்றால் குறிப்பிட்ட ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும் தான் சினிமாவில் நிலைத்து இருப்பார்கள்.

மற்றவர்கள் அனைவரும் சினிமா தொழிலில் நசுங்கி போய் விடக்கூடும் என முக்கிய நிபுணர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அத்தோடு சினிமா ஆர்வலர்களும் இந்த கருத்துக்களை ஒப்புக் கொள்வதால் சம்பள குறைப்பு நடந்தா தமிழ் சினிமா வீறு கொண்டு எழ கட்டாயம் சம்பள குறைப்பு அவசியம்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top