முக்கிய தினங்களில் தவிர்க்க கூடாத காய் கனிகள்..! – வாங்க பாக்கலாம்..!

அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, துவாதசி, போன்ற நாட்களில்  சில முக்கிய காய் கனிகளை உணவில் கடைபிடிப்பதால் நமது உடலுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

இந்த நாட்களில்  உள்ள கிரகங்களின் அமைப்புகள் , பூமி, மனிதன் இவற்றிக்கு  இடையே உள்ள ஈர்ப்பு சக்தியானது  மனிதனுக்கு தீமை ஏற்படுத்தாமல் நன்மை செய்யவும் நம் உடல் , உள் உறுப்புக்களை  அதுக்காகத்தான் நமது முன்னோர்கள் இந்தக் குறிப்பிட்ட காய் மற்றும் கனிகளை உணவில் சேர்த்து வந்துள்ளனர். என் மூலம் தீய ஈர்ப்பு சக்தியில் இருந்து நம் உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.

அம்மாவாசைக்கு உகந்த காய்கறிகள்:

அம்மாவாசையன்று சேப்பங்கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு மற்றும் கொடியில் விளைந்த பூசணிக்காய், அரசாணிக்காய் , அவரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நன்மையளிக்கும். 

தவிர்க்க வேண்டிய காய்கறிகள்  கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவை.

பௌர்ணமிக்கு உகந்த காய்கள்:

பௌர்ணமி அன்று நிலவு மிகவும் பெரிதாக காட்சிகளுக்கும். அந்நாளில் வெள்ளை, நீல நிற கோடு போட்ட கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூளை ஆரோக்கியம்  பாதுகாக்கப்படுவதாக முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிரதோஷம் மற்றும் துவாதசி:

பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரம் ஆகும். இந்த நாளில் பொன்னாங்கண்ணிக் கீரையை அருந்துவதின் மூலம் கண் பார்வை விருத்தியாகும்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் நெல்லிக்காய் அகத்திக் கீரை சுண்டைக்காய் போன்றவற்றை துவாதசி இன்று சேர்த்துக் கொள்வதன் மூலம்  நோய் எதிர்ப்புசக்தி கூடுவதுடன் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

சிவன்ராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி:

சிவபெருமானின் பிறந்தநாளான சிவன் ராத்திரியில் எல்லா வகையான பயிர்களையும் கலந்து பள்ளயம் எனும் பெயரில் உப்பில்லாமல் மறுநாள் விரதம் இருந்து உட்கொள்வதின் மூலம் எண்ணற்ற பலன்கள் உடலுக்கு கிடைக்கிறது. இன்னும் பல கிராமங்களில் சிவராத்திரியன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று இந்த விரத முறையை  தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள்.

சித்ரா பவுர்ணமி அன்று  சித்திரகுப்தருக்கு ஒன்பது வகையான கலவை சாதம்  எள் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், பால் சாதம், பருப்பு சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், புளி சாதம் இவற்றை ஆற்றங்கரையில் படையலிட்டு வணங்கி வருவதை இன்றும் நடைமுறையில் பல பகுதிகளில் காணலாம்.

நவராத்திரி

நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா. இதில் புரோட்டீன் சத்து நிறைந்த சுண்டல் வகைகள்   பிரசாதமாக படைக்கப்பட்டு  அனைவருக்கும் வழங்கப்படும். ஒன்பது நாட்களும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்கூறிய நாட்களில் கூறிய காய்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே கணித்து பாருங்களேன். அப்போது உங்களுக்கு நம் முன்னோர்களின் அருமை நிச்சயம் புரியும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version