யப்பா சாமி முடியலடா.. மீண்டும் மீண்டுமா..? விஜய் சேதுபதி மகன் மீண்டும் சர்ச்சை பேச்சு..!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா குலத்தொழில் குறித்து நெப்போட்டிசம் குறித்தும் பேசி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரைப்படங்களின் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய முதல் படமாக பீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னுடைய அப்பா தினமும் செலவுக்கு 500 ரூபாய் தான் கொடுப்பார். அவ்வளவு கஷ்டப்பட்டவன் நான்.

அதன் காரணமாகத்தான் நான் இப்போது சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் என பேசி இருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் எங்களுடைய ஒரு நாள் சம்பளமே ஐநூறு ரூபாய் தான்.

ஆனால் உனக்கு பாக்கெட் மணியாக மட்டும் 500 ரூபாய் கொடுத்து இருக்கிறார். 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கஷ்டப்பட்டேன் என்று வேற நீங்கள் கூறுகிறீர்கள்..? என்று சூர்யா விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு இரண்டு வார காலம் இது சார்ந்த மீம்கள் இணைய பக்கங்களை ஆக்கிரமித்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் குலத்தொழில் குறித்தும் நெப்போட்டிசம் குறித்தும் இவர் பேசியுள்ள பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, ஒரு நடிகரின் மகன் என்பதால் நீங்கள் எளிமையாக நடிக்கும் வாய்ப்பை பெற்று விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய தொகுப்பாளரிடம் ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம் ஒரு இன்ஜினியர் மகன் இன்ஜினியர் ஆகலாம் ஒரு நடிகரின் மகன் நடிகராக கூடாதா..? என்று ஏளனமாக தெனாவட்டாக பேசியிருக்கிறார் சூர்யா.

இவருடைய இந்த பேச்சை கடுமையாக விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள் டாக்டர் மகன் டாக்டர் ஆவதோ..? என்ஜினியர் மகன் என்ஜினியார் ஆவதோ..? எளிதாக நடக்கக்கூடிய விஷயம் அல்ல.

ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்றால் படிக்க வேண்டும்.. தேர்வுகள் எழுத வேண்டும்.. தகுதி தேர்வுகளை தாண்ட வேண்டும்.. ஒரு இன்ஜினியர் மகன் இன்ஜினியராக வேண்டுமென்றால் அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது.

ஆனால், அப்பாவின் பிரபலத்தை வைத்துக்கொண்டு எளிமையாக பட வாய்ப்பு பெற்று விட்டு இப்படி தெனாவட்டாக பேசுவதெல்லாம் ஏற்றுக் கொள்வதாக இல்லை என சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam