இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை. உங்கள் ஜென்ம ராசியில் இருக்கின்ற கிரகங்களின் அடிப்படையில் உங்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் எந்த கிரகம் உச்சத்தில் இருக்கிறதோ அதன் மூலம் அதிக நன்மைகளும் நீச்சத்தில் இருக்கும் கிரகங்களின் மூலம் நன்மைகளும் கிடைக்காது எனவே நீச்சத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் தன்மையை அதிகரிப்பதற்காகத்தான் பலவிதமான பரிகாரங்களை செய்வதோடு அவற்றுக்கு உரிய ராசி கற்களை நாம் அணிந்து கொள்கிறோம். மேலும் ஜோதிடத்தின் மூலம் நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு நமது செயல்களை அமைத்துக் கொள்கிறோம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களது ஆற்றல் அதிகரித்து காணக்கூடிய நாள். உங்களது இலக்குகளை நீங்களே நிர்ணயித்து அதற்குரிய முயற்சிகளை செய்து வெற்றியடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருப்பதால் கவனத்தோடும் நம்பிக்கையோடும் உங்கள் பணிகளை மேற்கொண்டு அது சிறப்பான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையான சமயத்தில் உங்களுக்கு பண உதவி கிடைக்கும்.மேலும் பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிக லாபத்தை பார்க்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் சில பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியமாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்றைய நாளை பொறுமையோடு நீங்கள் கையாளுவது அவசியமானதாகும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதின் மூலம் உங்கள் மனதிற்கு நன்மை ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை மேற்கொள்ளும் போது சற்று போராடித்தான் செயல்பட வேண்டி இருக்கும். பணி சுமை அதிகமாக காணப்படுவதால் நீங்கள் பணிகளில் தவறு செய்வதற்கு சூழ்நிலைகள் ஏற்படும்.எனவே பணியில் தவறு நடக்காமல் இருக்க திட்டமிட்டு கவனத்தோடு பணியை செய்வது மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக காணப்படும். பண வரவு குறைவாக உள்ளதால் நீங்கள் உங்கள் பணத்தை சிக்கனமாக சேமிப்பது அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயானின் உடல் நிலையில் சில கோளாறுகள் ஏற்படுவதால் அதற்காக பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டு பண்ணி தரும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு போராட்டங்கள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். எதிலும் பொறுமையோடு நீங்கள் இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் மும்மரமாக இருப்பீர்கள். அதிக அளவு முயற்சிகளை எடுத்துக் கொள்வதின் மூலம் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.மேலும் திட்டமிட்டு பணியை செய்வதின் மூலம் விரைவாக முடிக்கலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தட்டுப்பாடு அதிகளவு இருக்கும். செலவினங்கள் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் பணத்தை செலவு செய்ய நேரிடும். எனவே சிக்கனமாக இருக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கால் வலி ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் உள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷங்களை தள்ளி போடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய சில விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படுகிறது. கடினமான பணிகளையும் நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். மேலும் பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை நீங்கள் பயணத்தின் போது பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் எதையும் கவனத்தோடு கையாளுவது சிறப்பாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தோல் சம்பந்தமான பிரச்சனைகளால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எண்ணெய்யில் சமைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சேர்க்கிறது.

சிம்மம்

சிம்மராசி நண்பர்களே இன்று அனுகூலமான நாளாக உங்களுக்கு இருக்கும். சிறிய அளவு முயற்சியை செய்து உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் மூலம் இன்று லாபம் பார்க்கலாம்.

 தன்னம்பிக்கை அதிகரித்த நாளாக இருக்கும். தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் உங்கள் திறமையை அதிகளவு வெளிப்படுத்த முடியும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நீங்கள் விருப்பத்தோடு செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.மேலும் குடும்ப வளர்ச்சிக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரிடும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான ஆரோக்கியம் காணப்படுகிறது. ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் இல்லை என்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களின் இன்று பொதுவாக உங்களிடையே மகிழ்ச்சி அதிகமாக காணப்படும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் இன்று பல நன்மைகளை நீங்கள் பெற முடியும்.மேலும் வெளியிடங்களுக்கு விருந்துகளுக்கு சென்று நீங்கள் மகிழ்ச்சியை பெற்று விடுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை இன்று திறமையோடு கையாண்டு பொறுமையோடு எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எனினும் சில தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளதால் நீங்கள் கவனத்தோடு உங்கள் பணிகளை செய்வது மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை சிறப்பான முறையில் செலவு செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபடலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடற்பயிற்சியின் மூலம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மேலும் சிறப்பான பிரார்த்தனைகள் மற்றும் ஆன்மீக வழிபாடு செய்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக முடியும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள் சூடான விவாதங்களில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்.மேலும் அக்கம் பக்கத்தோடு கவனத்தோடு பழகுவது அவசியமாகும். நீங்கள் பேசுவதற்கு முன்பு பலமுறை யோசித்து பேசுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை திருப்திகரமான நிலை இல்லை.பணிச்சுமை அதிக அளவு இருக்கும். உங்களுக்கு சக பணியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் அதிக அளவு காணப்படும் அவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே பணத்தை சிக்கனமாக கையாள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் தியான பயிற்சியை மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பலன்கள் கலந்தே காணப்படும். எதிலும் பொறுமையாக இருப்பதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சமயோகித புத்தியை பயன்படுத்துவதன் மூலம் மேலும் உங்களது நன்மைகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை கடின உழைப்பின் காரணமாக மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். நீங்கள் சிறந்த அணுகுமுறையை மேற்கொள்வதின் மூலம் பணியில் நிறைய வெற்றியை பெறக்கூடிய சூழலை உருவாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. பணத்தை சம்பாதிப்பதும் கடினமாக இருக்கும். எனவே பண விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொடை மற்றும் கை கால் பகுதிகளில் வலி ஏற்படும் எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியமாகும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் புதிய மனிதர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல நல்ல பலன்கள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். நீங்கள் ஆற்றிய பணிக்காக உங்கள் மேல் அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும். எனவே நீங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணப்புழக்கம் உங்களுடைய காணப்படும் வெளியிடங்களுக்கு போதல் போன்றவற்றிற்காக திட்டமிட்டு பணத்தை நீங்கள் செலவு செய்வீர்கள். எனவே உங்கள் பண இருப்பு கரையும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏதுமில்லை. எனினும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரோக்கியத்தில் ஏற்படலாம். நீங்கள் ஆற்றலோடு இருந்தால் அதுவும் ஏற்படாது எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். இதன் மூலம் உங்களுக்கு வளர்ச்சி கட்டாயம் கிடைக்கும் நாள் என்று கூறலாம். அமைதியோடு நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணி அதிகமாக இருந்தாலும் நீங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். சக பணியாளர்களுடன் பழகும் போது கவனம் அவசியம் தேவை.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதி வளர்ச்சி மேம்படுவதால் உங்கள் செயல் திறன் அதிகரித்து இருக்கும். உங்கள் முதலீட்டை நீங்கள் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிக வேலையின் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமாக இருக்க நீங்கள் ஓய்வெடுப்பது அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சீராக இருக்கும் நீங்கள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் திருப்தி இருக்காது.மேலும் தவறுகள் நிகழ அடிகளவு வாய்ப்புகள் உள்ளதால் எதையும் கவனத்தோடு நீங்கள் செய்து முடிக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வளர்ச்சி சுமாராக இருக்கும். இன்று பணத்தை சமாளிப்பது சிரமம் ஏற்படும். எனவே நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசியின் நண்பர்களே இன்று உங்கள் முடிவுகளை செயல் ஆக்குவதில் நேர்மையோடு நீங்கள் இருக்க வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றும் எனவே குழப்பங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் செயல்களை கவனமாக செய்ய நீங்கள் திட்டமிட்டு முடிவுகளை எடுப்பது அவசியமாகும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மிகுந்த முயற்சியோடு பணியாற்ற வேண்டும். வீட்டு பிரச்சனைகள் பணிகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிதிநிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை காணப்படும். எனவே சிறிய அளவிலான கடனை வாங்க நேரிடலாம். பணத்தை செலவு செய்யும்போது பலமுறை யோசித்து செலவு செய்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். சளி மற்றும் இருமல் காரணமாக அசவுரியங்கள் ஏற்படலாம் எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam