33 வருடத்திற்கு பின் ரஜினி போட்ட பிளான்!! அதிரும் தமிழ் திரை உலகம்..

என்றுமே தமிழ் மக்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்தப் படமானது வரும் பத்தாம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் முன்னிலை இயக்குனர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தவரும் ரஜினி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

33 வருடத்திற்கு பின் ரஜினி போட்ட பிளான்..

இதனை அடுத்து மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சைகள் கொடுத்த நிலையில் உடல் நலம் தேறி வந்த அவர் அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விரைவில் கூலிப்பட சூட்டிங் கலந்து கொள்வார் என்பது தெரிய வந்தது.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவர் விரைவாக குணம் பெற வேண்டும் என பல்வேறு வகைகளில் பிரார்த்தனைகளை செய்து வந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் மீண்டும் சூட்டில் துவங்க இருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் தான் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த கூடிய வகையில் வெளி வந்திருக்கும் செய்தி அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குக் காரணம் 1991 ஆம் ஆண்டு ரஜினி இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மாசான கூட்டணி அமைத்து நடித்த தளபதி படம் ஒரு மாபெரும் வெற்றியை இருவருக்குமே பெற்று வசூலை வாரி கொடுத்தது.

அதிரும் தமிழ் திரை உலகம்..

இதனை அடுத்து இருவரும் இணைந்து இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து செயல்பட முடியவில்லை. எனினும் தற்போது கூலி படம் முடிந்த பிறகு ரஜினி தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் மணிரத்தினத்துடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதுகுறித்த உண்மை நிலை மற்றும் இதனுடைய அப்டேட்டுகள் அனைத்தும் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களின் மத்தியில் எந்த விஷயமானது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் இணையதள வாசிகள் இதை தெறிக்கப்பட்ட கூடிய வகையில் இந்த விஷயத்தை ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version