தற்சமயம் 96, மெய்யழகன் மாதிரியான திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் பிரேம்குமார். ஆரம்பத்தில் இவர் ஒளிப்பதிவாளராக நிறைய திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
அப்பொழுது அவருக்கு கிடைத்த அனுபவங்களை வைத்துதான் பிறகு இயக்குனராக மாறினார். தமிழ் சினிமாவில் நிறைய பேர் இப்படித்தான் வேறு துறைகளில் பணியாற்றி பிறகு இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர்.
அன்னைக்கு நான் காலி:
பொதுவாகவே சினிமாவிற்கு வரும் பலருக்கும் ஆரம்பத்திலேயே இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் இயக்குனராகி விட முடியாது. அதற்கு அனுபவம் இருக்க வேண்டும்.
தயாரிப்பாளர் இவர் இயக்குவதற்கு தகுதியுள்ளவர் என்று நம்ப வேண்டும் அப்பொழுதுதான் பாட வாய்ப்புகள் கிடைக்கும். அதனால்தான் பெரும்பாலும் இயக்குனராக நினைப்பவர்கள் திரைக்கதையில் பணிபுரிபவராகவோ அல்லது உதவி இயக்குனராகவோ பணி புரிந்து வருவார்கள்.
இயக்குனருக்கு நடந்த சம்பவம்:
அப்படியாகதான் பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக ஆரம்பத்தில் இருந்து வந்தார். அப்பொழுதே அவர் சிறப்பாக வேலை செய்ததை அடுத்து அவரால் இயக்குனராக முடிந்தது. அப்படி ஒளிப்பதிவாளராக இருக்கும் பொழுது அவருக்கு நடந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் பிரேம்குமார் கூறும் பொழுது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அந்த திரைப்படத்தை 5டி கேமராவில் எடுத்தோம்.
முதல் முறையாக 5டி கேமராவில் எடுத்து வெள்ளி திரையில் வரப்போகும் படமாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் இருந்தது. அதனால் எனக்கு அது குறித்து அதிக பயம் இருந்து கொண்டிருந்தது.
காப்பாற்றிய எடிட்டர்:
நான் நினைத்தது போலவே படம் இல்லை நான் எப்படி நினைத்து அந்த படத்தை எடுத்தேனோ அப்படி அது வரவில்லை. எடிட்டிங்கில் பார்த்த பொழுது எனக்கு பயமாக இருந்தது. அப்பொழுது என்னிடம் பேசிய எடிட்டர் நீ என்ன தவறு செய்தாயோ அதை சரி செய்ய தான் எடிட்டிங் கொண்டு வந்திருக்கிறோம்.
எனவே என்ன அதில் மாற்ற வேண்டும் என்பதை மட்டும் கூறு என்று கூறிய பிறகு பிரேம்குமார் என்ன அதில் பிரச்சனை என்பதை கூறியிருக்கிறார். பிறகு அவற்றை மாற்றி சரி செய்து கொடுத்திருக்கின்றனர்.
இது குறித்து கூறிய பிரேம்குமார் அப்பொழுது அந்த எடிட்டர் எனக்கு கடவுள் போல தெரிந்தார். அப்பொழுதுதான் சினிமாவையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறி இருக்கிறார்.