கணவருடன் தனியா இதை பண்ண வாய்ப்பு கெடைக்கல.. குண்டை தூக்கி போட்ட ஆர்த்தி ரவி.. முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

ஜெயம் ரவி ஆர்த்தி இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் சர்ச்சைக்குரிய நடிகர்கள் விவாகரத்து மாதியான விஷயங்களுக்கு செல்லும் பொழுது அது மக்கள் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்தாது.

உதாரணத்திற்கு ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் விவாகரத்து பெற்ற போது கூட ஜெயம் ரவி அளவிற்கு அந்த விவாகரத்து குறித்த பேச்சுக்கள் இல்லை. மேலும் அதிகபட்சம் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளும் பொழுது கணவனும் மனைவியும் விருப்பப்பட்டுதான் அந்த விவாகரத்தை செய்து கொள்வார்கள்.

கணவருடன் தனியா

அதனால் அது குறித்து சமூக வலைதளங்களில் அதிக பேச்சுகள் இருக்காது. ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தை பொருத்தவரை அவர்களுக்குள்ளேயே அதில் சமரசம் இல்லாமல் உள்ளது.

அதனை தொடர்ந்து இருவரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். இதுதான் ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்த விஷயத்தை அதிக சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைகளுக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருந்து வருபவர் என்பதாலும் இந்த விவகாரம் சூடு பிடித்து இருக்கிறது.

வாய்ப்பு கெடைக்கல

இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. தற்சமயம் இந்த விவாகரத்து விஷயத்தை திசை மாற்றும் விதமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியுடன் வெகு நாட்களாக தனிப்பட்ட ஒரு உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.

 

அவரோடு தனியாக பேசுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக்கு ஜெயம் ரவியை விவாகரத்து செய்து கொள்வதில் எந்த ஒரு விருப்பமும் இல்லை என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி.

குண்டை தூக்கி போட்ட ஆர்த்தி

மேலும் அவர் கூறும் பொழுது சமூக வலைதளங்களில் என்னை குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை பார்க்க முடிகிறது. நான் அமைதியாக இருப்பதால் என் மீது தவறு இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்த மாதிரி தனிநபரின் புகழை கெடுக்கும் வகையில் நான் பொது விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் ஆர்த்தி.

ஆனால் 18 வருடமாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஒரு தம்பதியினர் இவர்கள் இருவரும், அப்படி இருக்கும் பொழுது தனிப்பட்டு பேசுவதற்கு கூட ஆர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது நம்பும்படி இல்லையே! என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் படப்பிடிப்பு காரணமாக வெகு நாட்களாகவே ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சந்தித்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam