கழிவறையில் இதை செய்யவும் தயாராக இருந்தேன்.. இது தான் காரணம்.. அப்பாஸ் பேச்சு.. திகைப்பில் ரசிகர்கள்..!

நடிகர் அப்பாஸ் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தன்னுடைய முதல் படத்திலேயே பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் அப்பாஸ்.

அதனை தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஒரு காலத்தில் நடிகர்கள் அஜித் விஜய்க்கு இணையான மவுசு நடிகர் அப்பாஸுக்கு இருந்தது. கடந்த 1999 ஆம் ஆண்டு மட்டும் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான படையப்பா உட்பட எட்டு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அப்பாஸ்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு இடையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தார். இதற்கு முக்கியமான காரணம் உடல் எடை கூடியது என கூறலாம். மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் 10 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமானது தான் நடிகர் அப்பாஸ் செய்த மிகப்பெரிய தவறு என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் யாருமே தங்களுடைய ஒரு படம் வெளியாகும் வரை இன்னொரு படத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியே மிஞ்சி மிஞ்சி போனாலும் ஒரே ஒரு படத்தில் மட்டும் ஒப்பந்தம் ஆவார்கள்.

ஆனால் நடிகர் அப்பாஸ் தனக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு அதற்கான அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார். தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகிவிட்ட அப்பாஸிற்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வியடையவே ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்திருந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர் அப்பாஸின் மார்க்கெட் விழுந்துவிட்டது எனக்கூறி கொடுத்த அட்வான்ஸ் திருப்பி கேட்டு டார்ச்சர் செய்ய வேறு வழியில்லாமல் அந்த அட்வான்சுகளை திருப்பி கொடுத்துவிட்டு தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்தார்.

நடிகர் அபாஸ் செய்த அதே தவறை தான் தற்போது இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியும் செய்தார். தன்னுடைய ஒரு படம் வெளியாகும் முன்பே பல திரைப்படங்களில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.

இதனால் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் அடி வாங்கியது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்து விட்டார். இந்நிலையில், நடிகர் அப்பாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றிய கண்கலங்க பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, சினிமாவில் இருந்து விலகிய பிறகு இங்கிலாந்தில் வந்து செட்டில் ஆகிவிட்டேன். இங்கே வந்து பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தேன்.

பல நேரங்களில் அந்த பெட்ரோல் பங்கின் டாய்லட்டை கழுவி விட்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பு. அதற்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என பேசி இருக்கிறார்.

ஒரு காலத்தில் அஜித் விஜய்க்கு நிகரான மவுஸ் இருந்த நடிகர் அப்பாஸ் இப்படி பேசியதை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்து போய் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version