14 வருஷம் குழந்தை இல்லை என்பதற்காக.. என் கணவர் செய்த செயல்.. விருமாண்டி அபிராமி எமோஷனல் பேச்சு..!

தமிழ் திரை உலகில் நடிகை அபிராமி பல்வேறு படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். இவர் சின்னத்திரையில் அறிமுகமானதை அடுத்து வெள்ளி திரைக்கு நடிக்கச் சென்றவர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த வானவில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் இளைய திலகம் பிரபுவோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

14 வருஷம் குழந்தை இல்லை என்பதற்காக.. என் கணவர் செய்த செயல்..

இவர் கமலஹாசனோடு இணைந்து விருமாண்டி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவரை அனைவரும் விருமாண்டி அபிராமி என்ற அடைமொழியோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மேலும் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.

நடிகை விருமாண்டி அபிராமி தன்னுடைய கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இவரது கணவர் ஒரு மிகச்சிறந்த நண்பர் என்று கூறிய இவர் பள்ளிக்காலத்தில் இருந்தே அவரை தனக்குத் தெரியும். அப்போதே நட்போடு இருந்ததாக சொல்லியதை அடுத்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் பகிர்ந்தார்.

சினிமாவில் எவ்வளவு தான் புகழில் உச்சியில் இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தத்தை பார்க்க வேண்டும் என்று பக்குவமாக பேசி இருக்கக்கூடிய இவர் நிஜ வாழ்க்கையானது நம்மில் இந்த உலகத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் வகையில் இருக்கும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

விருமாண்டி அபிராமி எமோஷனல் பேச்சு..

தான் ஒரு நடிகை என்பதால் வெளியே செல்லும் போது என்னை பார்க்கும் மக்கள் என்னிடம் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் பேச வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அப்போது அவர் சிரித்தபடியே என்னை விட்டு விலகி நிற்பார். வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவர் எனக்காக மட்டும் அல்லாமல் எங்களுடைய முழு குடும்பத்திற்காக இந்தியா வந்து செட்டில் ஆகிவிட்டார்.

அந்த வகையில் 14 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வெளிநாட்டில் இருந்த போது எங்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. இதை அடுத்து தமிழ்நாட்டுக்கு வந்ததும் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

இதை அடுத்து என் கணவர் என்னிடம் ஒவ்வொரு கணவன் மனைவியாக மட்டும் அல்லாமல் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய நபர் உனக்கு என்ன தேவை உன்னுடைய விருப்பம் என்ன நீ ஏதாவது தனிப்பட்ட முறையில் செய்ய விரும்புகிறாயா? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு என்னுடைய சுதந்திரத்திற்கு பக்க பலமாக இருக்கிறார் என்று அண்மை பேட்டியில் அபிராமி கூறி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam