வரும் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு தல அஜித்தின் விடா முயற்சி திரைப்படம் வெளி வரும் என்ற செய்தி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்த இருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்காக காத்திருக்க கூடிய தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் தல அஜித் நடிப்பில் உருவாக்கி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் 2025-ஆம் ஆண்டு வெளிவரும் என்ற தகவலை படக்குழு சார்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். அதோடு படத்தின் டீசரை வெளியிட்ட லைக்கா நிறுவனம் பட ரிலீஸ் குறித்து சொல்லியிருந்தார்கள்.
சூப்பர் சர்ப்ரைஸ் வரும் பொங்கலுக்கு விடா முயற்சி..
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் விஷயங்கள் கசிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு மாதமே உள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.
மேலும் பட டீசரில் மாஸ் காட்டி இருக்கும் அனிருத் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களில் சிறப்பாக சம்பவம் செய்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே ஷூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஷூட்டிங் தாமதம் ஆனது.
வெளி வந்த நியூஸ் ரசிகர்கள் ஆரவாரம்..
தற்போது ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் 10 நாட்களில் பாங்கில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்து முடிய உள்ள சூழ்நிலையை பட குழு தெரிவித்திருப்பதோடு படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதை அறிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை பார்க்க ஆவலாக வெயிட்டிங் செய்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே வரும் பொங்கல் தல பொங்கலாக ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது.
Summary in English: Hey there, movie buffs! Exciting news for all Ajith Kumar fans out there! The buzz is real because the first single from his much-anticipated film “Vidaamuyarchi” is set to drop soon. If you’re as hyped as we are, you know this track is going to be a must-listen.