கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து கலர் சினிமா என்கிற ஒரு விஷயம் வந்த பொழுது நிறைய மாற்றங்கள் தமிழ் சினிமாவில் நடந்தன.
டப்பிங் தொழில்நுட்பத்தில் துவங்கி நிறைய விஷயங்கள் வேறு மாதிரி நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் காமெடி நடிகர்களுக்கான இடைவேளையும் அப்பொழுது அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் அறிமுகமானவர்தான் நடிகர் கவுண்டமணி.
நேரடியாவே அதை பண்ணுவாரு
நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட பல வருடங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி நடிகர்களாக இருந்து வந்தனர். அவர்கள் இருந்து வந்த காலகட்டத்தில் வேறு சில காமெடி நடிகர்கள் வந்தாலும் கூட அவர்களால் கவுண்டமணி செந்தில் அளவிற்கான வரவேற்பை பெற முடியவில்லை.
பிறகு சில சண்டை காரணமாக கவுண்டமணியும் செந்திலும் தனியாக பிரிந்து விட்டனர். அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டுதான் வடிவேலு பிறகு பெரிய காமெடி நடிகராக மாறினார்.
கவுண்டமணியின் அந்த குணம்
ஆனால் கவுண்டமணி திரையில் சிறப்பான ஒரு காமெடி நடிகராக இருந்தாலும் அவருடைய பொது வாழ்க்கையில் அவரைக் குறித்து நிறைய சர்ச்சைகள் உள்ளன. நிறைய நடிகர் அவரை பிடித்து அவதூறான விஷயங்களை கூறியிருக்கின்றனர்.
கவுண்டமணி பழகுவதில் மிகவும் மோசமானவர் என்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர் இந்த நிலையில் நடிகர் ஜனகராஜ் இது குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கவுண்டமணி மாதிரி ஒரு கேரக்டரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது.
உண்மையை கூறிய நடிகர் ஜனகராஜ்
அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை நேரடியாகவே நம்மிடம் கூறிவிடுவார். நம்மை அனுப்பிவிட்டு முதுகுக்கு பின்னால் ஒன்று பேசுவது என்கிற எண்ணமே கவுண்டமணிக்கு கிடையாது தோன்றியதை மூஞ்சிக்கு முன் பேசுவது தான் அவருக்கு குணம் என்று கூறியிருக்கிறார் ஜனகராஜ்.