“கோ” படத்திற்கு பின் சிம்புவுடன் சண்டை..? இது தான் காரணம்..! ரகசியம் உடைத்த ஜீவா..!

பிரபல நடிகர் ஜீவா கோ படத்தில் தனக்கும் நடிகர் சிம்பு இடையே ஏற்பட்ட பிரச்சனை மற்றும் மனக்கசாப்பு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிய பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது கோ படத்தில் நடிகர் சிம்பு தான் முதலில் ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்கள் காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார்.

அதன் பிறகு நான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தேன். படம் மிகப்பெரிய வெற்றி படமாக வந்தது.

அந்த நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நான் எதையோ சொல்ல அது நடிகர் சிம்பு வைத்தான் நான் சொன்னேன் என்று ப்ரொஜெக்ட் ஆகி விட்டது.

நான் என்ன சொன்னேன் என்றால்.. நண்பர்களே அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.. மாறாக முதுகில் குத்துபவர்களை நாம் நண்பர்கள் என சொல்லக்கூடாது.. என பொதுவாக நான் சொன்ன விஷயத்தை அதை நான் சிம்புவை குறிப்பிட்டு கூறினேன் என செய்திகளை வெளியிட்டு விட்டார்கள்.

இதனால் எனக்கும் சிம்போக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்பது உண்மைதான். அதன் பிறகு இருவருக்கும் உறவு சுமூகமாக இல்லை. ஒரு நிகழ்ச்சியை நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

அப்போது கலா மாஸ்டர் அங்கே இருந்தார். கலா மாஸ்டருக்கு தெரியும் நான் சிம்புவை குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை என்று அப்போது சிம்புவை அழைத்து என்னிடம் அமர வைத்து இந்த விஷயத்தை எடுத்து கூறினார்.

அதன் பிறகு இருவரும் பேசினோம். எனக்கு சிம்புவை சிறுவயதிலிருந்து எனக்கு தெரியும். நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். என்னுடைய பேச்சை நடிகர் சிம்பு தவறாக புரிந்து கொண்டார். அந்த சந்திப்பில் நான் அவருக்கு விளக்கமாக சொன்னேன்.

அதன் பிறகு எங்களுக்குள் இந்த மனக்கசப்பு எல்லாம் நீங்கி விட்டது என பேசி இருக்கிறார் நடிகர் ஜீவா.

Summary in English : During the buzz surrounding the release of the movie “KO,” actor Jiiva opened up about a little misunderstanding he had with fellow actor Simbhu. It’s always interesting to hear behind-the-scenes stories, and this one is no exception! Jiiva revealed that there was some confusion about their promotional schedules, which led to a bit of tension between them.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam