ரகுவரனின் வாரிசு கரண் என்ன ஆனார் தெரியுமா? பரிதாபமான நிலை..!

தமிழில் பிரபலமான சில வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கரண். நிறைய அம்மன் திரைப்படங்களில் நடிகர் கரணை வில்லனாக பார்க்க முடியும். அதனாலேயே அம்மன் திரைப்படங்கள் என்றாலே அதில் வில்லன் கரன் தான் என்று பலரும் நினைக்கும் அளவிற்கு அவர் நடித்திருக்கிறார்.

ஆனால் நடிப்பை பொறுத்தவரை மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் கரண். கரண் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது வில்லன் நடிகராக நடிப்பதற்காக வரவில்லை. ஆரம்பத்தில் கதாநாயகர்களுக்கு உதவி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நடிகர் கரண்:

போக போக வில்லனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது ஆனால் அதற்கு முன்பே சிறு வயதில் இருந்தே அவர் சினிமாவில் நடித்து வருகிறார். முக்கியமாக மலையாளத்தில் மட்டும் சிறுவயதிலேயே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கரண்.

வில்லன் நடிகராக மாறிய பிறகு கரணுக்கு ஒரு பெரிய மாற்றமாக அமைந்த திரைப்படம், அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என்றால் கமலுடன் அவர் நடித்த நம்மவர் திரைப்படத்தைதான் கூற வேண்டும். அந்த திரைப்படத்தில் முக்கிய வில்லானாக நடித்தார் கரண்.

ரகுவரனின் வாரிசு கரண்

கமலுக்கு சரி சமமான ஒரு எதிரியாக அதில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களில் வரிசையாக வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. விஜய்யோடு கோயம்புத்தூர் மாப்பிள்ளை, லவ் டுடே, காலமெல்லாம் காத்திருப்பேன் நேருக்கு நேர், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதே மாதிரிதான் அஜித்தோடு காதல் கோட்டை, காதல் மன்னன், உன்னை தேடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு நடிகர் பிரசாந்துடன் சேர்ந்து கண்ணெதிரே தோன்றினாள் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

பரிதாபமான நிலை

பிரசாந்தை விடவும் இவருக்குதான் அந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு கரணுக்கு மற்றும் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் துள்ளித் திரிந்த காலம் என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் ஃபிளாஷ்பாக் காட்சிகளில் ரகுவரனுக்கு மகனாக நடித்திருப்பார்.

ரகுவரன் மற்றும் கரண் இருவருமே நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார்கள். அதற்குப் பிறகு கரணை ரகுவரனின் வாரிசு என்றுதான் சினிமா உலகம் அழக்க துவங்கியது. அதற்குப் பிறகு வெகு நாட்களுக்கு பிறகு கொக்கி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார் கரண்.

ஆனால் அவரது ரீ எண்ட்ரி என்பது பெரிதாக வெற்றியை பெறவில்லை அதற்குப் பிறகு அவர் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம், உச்சத்துல சிவா மாதிரியான எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை அடையவில்லை. இந்த நிலையில் மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும் இப்பொழுது வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இவர் இருந்து வருகிறார். மீண்டும் தமிழில் வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version