அந்த வார்த்தை சொல்லி இயக்குனரை திட்டிய கவின்.. வெற்றிமாறன் படத்தில் நடந்த சம்பவம்..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்களுக்கு பிறகு தற்சமயம் அடுத்த தலைமுறை நடிகராக சிலர் தமிழ் சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றனர்.

நடிகர் மணிகண்டன், கவின் மாதிரியான நடிகர்கள் எல்லாம் அந்த வரிசையில் தான் வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மணிகண்டன் நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இயக்குனரை திட்டிய கவின்

சமீபத்தில் அவர் நடித்திருந்த குட் நைட், லவ்வர் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன. அதேபோல நடிகர் கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கும் வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது.

அவர் நடித்த டாடா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு அவர் நடித்த ஸ்டார் திரைப்படமும் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருந்தது. இந்த நிலையில் நெல்சன் தயாரிப்பில் அடுத்து ப்ளடி பக்கர் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின்.

வெற்றிமாறன் படத்தில் நடந்த சம்பவம்

அதே சமயம் இன்னும் இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் தற்சமயம் நடிகர் மணிகண்டனை விடவும் கவின் அதிக சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் கவினை குறித்து நிறைய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன .

படப்பிடிப்பு தளங்களுக்கு சரியான நேரத்துக்கு வருவது கிடையாது அதேபோல நடிக்கும் பொழுதே நிறைய பிரச்சனைகள் செய்கிறார் என்று கவினை குறித்து குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதேபோல ஒவ்வொரு படத்தில் கமிட்டாகும் பொழுதும் சம்பளத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

வாய்ப்பு போயிடும்:

இதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்த திரைப்படத்தில் புதிய இயக்குனர் ஒருவர் அறிமுக இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

படப்பிடிப்பில் ஒரு கட்டத்தில் கடுப்பான கவின் அந்த இயக்குனரை மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டியதாக பேச்சுக்கள் இருக்கின்றன தொடர்ந்து கவின் இந்த மாதிரி செய்து கொண்டிருந்தால் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டமாகிவிடும் என்று தற்சமயம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version