மீனா மீது பைத்தியமாக அலைந்த பிரபல நடிகையின் கணவர்..! யாருன்னு பாருங்க..!

தமிழ் திரை உலகில் கண்ணழகி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மீனா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்த தனக்கு என்று ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

மீனா பொண்ணு மீனா பொண்ணு என்ற பாடலுக்கு ஏற்றபடி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ஹீரோயினியாக நடித்து அசத்தியவர்.

மீனா மீது பைத்தியமாக அலைந்த பிரபல நடிகையின் கணவர்..

ரஜினி, கமல், விஜய் என பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை மீனா திரைப்படங்களில் நடிக்கும் போது அதிகளவு கிசுகிசுகளில் சிக்காத நடிகையாக திகழ்ந்தவர். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து இவரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தது.

திரைப்படங்களில் போதுமான அளவு மட்டும் கவர்ச்சி காட்டி நடித்திருக்க கூடியவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் 1982 இல் வெளி வந்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை மீனா என்பது உங்களுக்கு தெரியுமா.

இதனை அடுத்து தான் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இதனை அடுத்து இவர் சினிமாவில் அறிமுகமாகி இது வரை 40 ஆண்டுகள் முடிந்து விட்டது.

இவ்வாறு 40 ஆண்டுகளைக் கடந்த நடிகை என்பதால் இவரை பாராட்டக்கூடிய வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு மீனா பற்றி பல்வேறு விஷயங்களை மேடையில் பகிர்ந்தார்கள்.

யாருன்னு பாருங்க..

அந்த வகையில் புன்னகை அரசி சினேகாவின் கணவர் பிரசன்னா மீனா பற்றி அந்த மேடையில் பேசி இருக்கிறார். அப்படி அவர் பேசும் போது மீனாவின் பெரிய ரசிகை ரசிகன் நான் என்பதை ஓபன் ஆக தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மீனாவுடன் ஜோடியாக ரஜினிகாந்தை தவிர வேறு யாரும் நடிக்க கூடாது அப்படி நடித்தால் தன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை கூறுகிறார்.

அப்படி மீனாவின் மீது ஒரு வித பொசசிவ்னஸோடு இருந்ததாகவும் எஜமான் படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்று சென்னையில் இருந்து கரூருக்கு டிரெயினில் பயணம் செய்து படம் பார்க்க சென்ற தகவலை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

மேலும் மீனாவின் மீது அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான அன்பு இருந்ததாக மேடையில் பிரசன்னா கூறி இருக்கிறார். இதனை அடுத்து அவரது மனைவியும் அங்கு இருக்க இதற்கு ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்திருப்பதை பார்த்து இணையம் அதிர்ந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்காக பிரசன்னா பொய் சொல்லவில்லை என்று கூறிய சினேகா தன்னிடமே அது பற்றி பலமுறை கூறியிருக்கிறார் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகை மீனாவின் மீது பைத்தியமாக அலைந்த சினேகாவின் கணவர் பிரசன்னா பேசிய பேச்சு தற்போது வைரலாக மாறியுள்ளது.

மேலும் இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version