சிவகார்த்திகேயன் காமெடி நடிகராக அறிமுகமான அதே காலகட்டத்தில் இன்னொரு காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் சதீஷ். சதீஷும் சிவகார்த்திகேயனும் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இதனாலேயே சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் தொடர்ந்து சதீஸ்க்கு வாய்ப்புகள் இருந்ததை பார்க்க முடியும். அதேபோல சதீஷ் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவருக்கு உதவிகள் செய்து வந்தார்.
அதை பத்தி பேசுனேன்
நடிகர் சதீஷை பொருத்தவரை இருக்கும் பிரபலங்களில் மிக ஜாலியாக பேசக்கூடிய ஒருவராக இவர் இருந்து வருகின்றார். நிறைய விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியிருப்பதை பார்க்க முடியும். ஏனெனில் அவரின் பேசும் திறனே அதற்கு காரணமாக இருக்கிறது.
சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்றை அவர் பேசி விடுவது உண்டு என்றாலும் கூட மிக எதார்த்தமாக வெளிப்படையாக பேசக்கூடிய நபராக சதிஷ் இருந்து வருகிறார். நாய் சேகர் மற்றும் காஞ்சுரிங் கண்ணப்பன் மாதிரியான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன.
ஆணும் பெண்ணும் சமமே கிடையாது
இந்த நிலையில் விழா ஒன்றில் பேசிய பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார் சதீஷ். அதில் அவர் கூறும் பொழுது நான் இவ்வளவு வருடங்களாக மது அருந்துவதோ அல்லது புகை பிடித்ததோ கிடையாது. நீங்களும் அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கல்லூரி மாணவர்களிடம் கூறினார்.
இப்படித்தான் ஒருமுறை நான் பெண்கள் கல்லூரிக்கு பேசுவதற்காக சென்றிருந்தேன் அப்பொழுது அங்கே இருந்த பிரின்சிபல் என்னிடம் சார் மது அருந்தக்கூடாது என்று இவர்களுக்கு கொஞ்சம் ஆலோசனை கொடுங்கள் என்று கூறினார்.
பெண்கள் கல்லூரியில் என்ன ஆலோசனை கொடுப்பது என்று கேட்டேன் இல்லை இவர்களும் அதிகமாக அந்த பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்று அந்த பிரின்சிபல் என்னிடம் கூறினார். பெண்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் ஆணுக்குப் பெண் சமம் என்று எல்லா விஷயத்தையும் செய்யக்கூடாது. உண்மையில் ஆணும் பெண்ணும் சமம் கிடையாது பெண்கள் ஆண்களை விட மேம்பட்டவர்கள் எனவே சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள் என்று அறிவுரை கூறியிருந்தால் சதீஷ்.