சத்தியனின் பூர்வீக பங்களா! ஜமீன்தாரரா? 500 ஏக்கருக்கு மேல் சொத்து.. சத்யன் சத்யராஜ் என்ன உறவு?..

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சத்தியன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரது பூர்வீகம் கோவைக்கு அருகில் இருக்கும் மாதம் பட்டி. இவர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல ஒரு மிகப்பெரிய ஜமீன் பரம்பரையில் இருந்து வந்தவர்.

இந்த மாதம்பட்டி கிராமம் ஆனது சமையல்காரர் ரங்கராஜரால் பேமஸ் ஆனதா? என்று கேட்டால் அவரும் ஒருவர் என்று சொல்லக்கூடிய அளவில் பல பிரபலங்களை நமக்காக கொடுத்த ஊர் மாதம்பட்டி. ஏனெனில் மாதம்பட்டி ஜமீன்தான் நடிகர் சத்தியனின் பரம்பரையாக இருந்துள்ளது.

சத்தியனின் பூர்வீக பங்களா! ஜமீன்தாரரா?

மாதம்பட்டி சிவகுமார் ஜமீனின் மகன் தான் சத்யன். ஜமீன்தார் முறை ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றைய தலைமுறையில் சத்தியன் தான் ரியல் ஜமீனாகவும் நிஜ எஜமானாக அந்த ஊர் மக்களால் கொண்டாடப்படுவார்.

இந்த ஊரில் தான் நடிகர் சத்தியனின் வீடு என்பதை விட ஜமீன்தாரின் அரண்மனை என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் நேர்த்தியான முறையில் அழகாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த மாதம்பட்டி ஜமீனுக்கு 500 முதல் ஆயிரம் ஏக்கர் வரை சொத்துக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால் தற்போது எந்த ஊரில் ஒரு சிறு இடம் கூட சொந்தமாக இல்லை.

இவற்றையெல்லாம் விற்று விட்டு சென்று விட்டார்கள் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த அரண்மனையை தற்போது கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கி இருக்கிறார். எனினும் நடிகர் சத்யனை இந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் ராசா, எஜமான், குட்டி ராசா என்றுதான் அழைக்கிறார்கள்.

500 ஏக்கருக்கு மேல் சொத்து..

இந்த மாதம்பட்டி சிவகுமார் ஜமீனாக இருந்தாலும் சினிமா துறையில் கால் பதித்தவர். பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் ஆரம்ப காலத்தில் வில்லனாகவும் பின்னாலே ஹீரோவாகவும் நடித்த சத்யராஜுக்கு பணம் கொடுத்து சென்னைக்கு நடிக்க அனுப்பி வைத்தவரும் இவர்தான்.

மேலும் சத்யராஜும் நடிகர் சத்தியனும் நெருங்கிய உறவினர்கள் என்பது போல நடிகர் சிவகுமாருக்கும் இந்த ஜமீனுக்கும் ஒரு தொடர்பு இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜமீன் அரண்மனை திட்டத்தட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து இருந்தது. மேலும் இந்த அரண்மனையில் ஒரு பாதாள அறையும் உள்ளது. இந்த அரண்மனை ஒட்டிய பகுதிகளில் ஷூட்டிங் எடுத்திருக்கிறார்கள்.

அது குறிப்பாக பூவும் புயலும், அன்புள்ள தங்கச்சி ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களை சொல்லலாம். மேலும் சத்யனுக்கு கார்த்தி சூர்யா போன்றவர்களும் சொந்தக்காரர்கள் தான்.

சத்யன் சத்யராஜ் என்ன உறவு?

சத்தியனின் அப்பாவும் சத்யராஜும் சகலைகள் இருவரும் அவரது அக்கா மகளை தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நடிகர் சத்யம் எவ்வளவு பெரிய ஜமீன் என்றும் சத்யராஜ் மற்றும் சத்யம் இடையே இருக்கும் உறவு முறையும் தெளிவாக தெரிந்திருக்கும்.

இதை எடுத்து சத்யராஜ் சித்தப்பா முறை அதாவது பங்காளிகளாக இருக்கக்கூடிய சச்சின் மற்றும் சத்யராஜின் உறவு குறித்தும் சிவகுமார், கார்த்தி, சூர்யா போன்ற நடிகர்களின் உறவு முறை பற்றியும் தெரிந்து கொண்ட ரசிகர்கள் இது பற்றி அவர்கள் நண்பர்களோடு பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் பேசும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version